மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 அக் 2019

துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!

துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வென்றிருந்தாலும்... அவரது தந்தை துரைமுருகனின் சொந்த ஊரில், உள்ள சொந்த பூத் தில் திமுகவை விட அதிமுகவே அதிக வாக்குகள் வாங்கியிருக்கும் விவரம் தற்போது தெரியவந்துள்ளது.

வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஆகஸ்டு 10 ஆம் தேதி வெளியிடப்பட்டுவிட்டாலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒவ்வொரு பூத்திலும் யார் யார் எத்தனை வாக்குகள் வாங்கியிருக்கிறார்கள் என்ற விவரம் தற்போது தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் கிடைத்துள்ளது. இதை வைத்துக்கொண்டு துரைமுருகனை தூர்வாரி வருகிறார்கள் சில திமுக நிர்வாகிகளே.

வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கீழவைத்தியணன் குப்பம் எனப்படும் கேவிகுப்பம் தொகுதியில் இருக்கும் காங்குப்பம் கிராமம்தான் துரைமுருகனின் சொந்த ஊர். இந்த ஊரில் காங்குப்பம், பெருமாங்குப்பம், காங்குப்பம் காலனி என்ற மூன்று பகுதிகள் இருக்கின்றன.

இந்த பகுதியில்தான் துரைமுருகன் பிறந்து வளர்ந்தார். திருமணம் ஆன புதிதில் அவர் தனது மாமனார் ஊரான காட்பாடியில் செட்டிலாகிவிட்டார். அதேநேரம் துரை சிங்காரம் உள்ளிட்ட துரைமுருகனின் சகோதரர்கள், பங்காளிகள் எல்லாம் இன்னும் காங்குப்பத்தில்தான் இருக்கிறார்கள். துரைமுருகனின் குடும்பத்தினரின் குல தெய்வக் கோயிலும் இந்தப் பகுதியில்தான் இருக்கிறது,. தேர்தல் வெற்றிக்காக குல தெய்வத்துக்கு பன்றியை வெட்டி பலி கொடுத்து பூஜை நடத்தியதாகவும் கேவிகுப்பம் தொகுதியில் பேசப்பட்டது. துரைமுருகனுக்கு மிகவும் வேண்டப்பட்ட ஆனந்த சித்தரும் இந்த பகுதியில்தான் இருக்கிறார்.

நடந்து முடிந்த தேர்தலில் துரைமுருகனின் சொந்த ஊரில் கிடைத்த ரிசல்ட் அவரை அப்செட் அடைய வைத்திருக்கிறது.

காங்குப்பத்தில் அமைந்திருக்கும் 159 ஆவது வாக்குச் சாவடியில் திமுக 433 ஓட்டுகளும், அதிமுக 339 ஓட்டுகளும் பெற்றிருக்கின்றன. இங்கே 94 வாக்குகள் திமுக லீடிங் வந்தது. இதே கிராமத்தின் பெருமாங்குப்பம் வாக்குச் சாவடி எண் 158 இல் திமுக 401 வாக்குகள் பெற, அதிமுகவோ 505 வாக்குள் பெற்று 104 வாக்குகள் லீடிங் பெற்றது. காங்குப்பம் காலனி பகுதியில் திமுக 328 வாக்குகளும், அதிமுக 318 வாக்குகளும் பெற்றன.

ஆக, திமுக மொத்தம் 1162 வாக்குகள் பெற்றிருக்கிறது. அதிமுகவும் மிகச் சரியாக 1162 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. ஆக துரைமுருகனின் சொந்த ஊரில் திமுகவும், அதிமுகவும் சம பலத்தில் இருக்கின்றன.

இதையடுத்து துரைமுருகன் பெரிதும் அப்செட் ஆகிவிட்டார். தனது சொந்த ஊர் திமுகவினருக்கு போன் போட்டு, ’என் சொந்த ஊர்லயே திமுகவுக்கு இணையா அதிமுக வந்துடுச்சு. என்னயா வேலை பார்த்திருக்கீங்க?” என்று கோப்பட்டு திட்டித் தீர்த்திருக்கிறார் துரைமுருகன்.

‘இவ்வளவு ஓட்டு விழுந்ததே நமக்கு அதிகம்’ என்று போனை வைத்துவிட்டு பொறுமிக் கொண்டிருக்கிறார்கள் லோக்கல் திமுகவினர்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


என்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி?


வேலூர்: தேர்தல் முடிவை மாற்றிய சீமான்


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon