மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

பக்ரீத்: எல்லையில் இனிப்பு பரிமாறப்படவில்லை!

பக்ரீத்: எல்லையில் இனிப்பு பரிமாறப்படவில்லை!

இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று (ஆகஸ்டு 12) கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காஷ்மீர் பிரச்சினையால் இந்திய -பாகிஸ்தான் எல்லையில் பக்ரீத் கொண்டாட்டம் நடைபெறவில்லை.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 ஆவது பிரிவு கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. ஒரு வாரமாக காஷ்மீர் ராணுவம், பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று காஷ்மீரில் அதிகாரிகளுடன் ஆலோசனையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். பக்ரீத் பண்டிகையை ஒட்டி காஷ்மீரில் இஸ்லாமியர்கள் மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

அதேநேரம் இந்திய -பாகிஸ்தான் எல்லையில் வழக்கமாக இந்திய, பாகிஸ்தான் பண்டிகைகளின் போது இனிப்பு பரிமாறிக் கொள்வது வழக்கம். சிற்சில ஆண்டுகளைத் தவிர நீண்ட காலமாக தொடர்ந்து வந்த இந்த நடைமுறை இன்று நடைபெறவில்லை.

இந்திய பாகிஸ்தான் எல்லை என்பது ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய சுமார் மூவாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு இருக்கிறது. இரு நாடுகளின் முக்கியமான பண்டிகைகளான பக்ரீத், ஹோலி, தீபாவளி, ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளின் போது இரு நாடுகளைச் சேர்ந்த எல்லை வீரர்களும் தங்களுக்குள் இனிப்புகளை பரிமாறிக் கொள்வார்கள். இதன் மூலம் பண்டிகைகளை இரு நாடுகளும் இணைந்துகொண்டாடும் ஒரு சுமுக சூழல் நிலவியது.

ஆனால் இந்த ஆண்டு காஷ்மீருக்கான 370 பிரிவு ரத்து, அதன் பிறகான இந்திய பாகிஸ்தான் உறவுகளால் எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் வீரர்கள் சார்பில் இனிப்புகள் பரிமாறிக் கொள்ளப்படவில்லை.

“இன்று பக்ரீத்தை முன்னிட்டு இந்தியத் தரப்பில் பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்புகளையும், வாழ்த்துகளையும் பரிமாறிக் கொள்வதற்காக முயற்சிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதற்கு எந்த வித ரெஸ்பான்ஸும் இல்லை. இதனால் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் வழக்கம் இன்று நடைபெறவில்லை. இந்தியா இனிப்புகளோடு கை நீட்டியும் பாகிஸ்தான் பிடிவாதமாக மறுத்துவிட்டது” என்று இந்திய அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

முன்னதாக இரு நாடுகளுக்கு இடையிலான ரயிலை பாகிஸ்தான் நிறுத்திவைத்த நிலையில், டெல்லியில் இருந்து லாகூர் செல்லும் பஸ்போக்குவரத்தை இந்தியா நிறுத்துவதாக இன்று அறிவித்துள்ளது.


மேலும் படிக்க


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon