மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

திருப்பூர் சிறுமிக்கு அமெரிக்க விருது!

திருப்பூர் சிறுமிக்கு அமெரிக்க விருது!

திருப்பூர் அங்கேரிபாளையத்தைச் சேர்ந்த சிறுமி மகா ஸ்வேதா சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதைப் பெற்றுள்ளார்.

‘ஆரோடு பரயும்’ என்ற மலையாளக் குறும்படத்தை இயக்கியுள்ளார் கேரளாவின் பாலக்காடைச் சேர்ந்த சுஜித் தாஸ். இந்தப் படத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் மகா ஸ்வேதா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது தந்தை பி.யு.கிருஷ்ணன் குறும்படத்தைத் தயாரித்துள்ளார்.

அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விருதுகளுக்கு இந்தப் படத்தை படக்குழுவினர் அனுப்பியுள்ளனர். அதில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை மகா ஸ்வேதா பெற்றுள்ளார்.

“மகா ஸ்வேதா நடிப்பதில் மிகவும் விருப்பமுடையவராக இருந்தார். இயக்குநரும் அவருக்கு நம்பிக்கையூட்டி நடிக்கச் செய்தார். பணிகளைக் காரணம் காட்டிபெற்றோர்கள் பரபரப்பாக இயங்க, குழந்தை அன்பையும், கவனத்தையும் பெற ஏங்குவதாக இந்தக் கதை அமைந்துள்ளது. மகா ஸ்வேதா இந்தக் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார்” என்று தயாரிப்பாளரும் ஸ்வேதாவின் தந்தையுமான கிருஷ்ணன் கூறியுள்ளார்.

அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியுள்ள இந்த குறும்படம் 1.5 லட்ச ரூபாய்க்கு உருவாகியுள்ளதாக கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon