மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

தம்பி பிரியாணி இன்னும் வரலை: அப்டேட் குமாரு

தம்பி பிரியாணி இன்னும் வரலை: அப்டேட் குமாரு

வழக்கம் போல தான், மத்தியானம் முழுக்க வாசலையே பார்த்துகிட்டு இருந்துட்டு ஒருத்தரும் வராததாலே இப்ப தான் ஒரு டீ அடிச்சுட்டு வாரேன். இங்க வந்து பார்த்தா அம்புட்டு பேரும் பிரியாணி சாப்பிட்டு போட்டோ போட்டு கடுப்பை கிளப்புதாங்க.

ஸ்க்ரோல் பண்ணி பார்க்கும் போது எடப்பாடி உம்முன்னு இருக்குற போட்டோ ஒண்ணு இருந்துச்சு. ஒருவேளை அவருக்கும் நம்மளை மாதிரி பிரியாணி கிடைக்கலையோ என்னம்மோன்னு உள்ள கிளிக் பண்ணி பார்த்தா அமெரிக்காவுக்கு பிளைட்டுல போய்கிட்டு இருக்குற போட்டோ அது. சரி மோடி மாதிரி டிரை பண்ணுறாரு போல. சேலத்தையே தமிழ்நாடா நினைச்சு சுத்தி வந்தவரை இப்படி நாடு விட்டு நாடு கடத்துறாங்களேன்னு நினைச்சுகிட்டேன். கீழே பார்த்தா, ‘நியூஸ் போடுறவங்க நல்ல போட்டோ போடக்கூடாதா குடும்ப கஷ்டத்துல துபாய்க்கு போறவங்க மாதிரி இருக்கு’ன்னு ஒருத்தர் கமெண்ட் போட்ருக்காரு. குசும்பு பிடிச்சவங்க அம்புட்டு பேரும் இங்க தான் இருக்காங்க. நீங்க அப்டேட்டை பாருங்க. நான் போய் அதுல ஒரு ‘ஹா ஹா’ போட்டுட்டு வாரேன்.

கோழியின் கிறுக்கல்!!

சம்பாதிப்பதற்கு ஆயிரம் பேர் ஆயிரம் அறிவுரை தருவார்கள்!

ஆனால் சிக்கனமாக செலவு செய்வதை மட்டும் நீங்களாகவே தான் கற்றுக் கொள்ள வேண்டும்!!

பழைய சோறு

அக்காவின் கல்யாண கடனை அடைக்கனும் ,

எப்படியாவது ஒரு வீடு கட்டனும் ,

முதல் மாத சம்பளத்தில் அடகு வைத்த அம்மாவின் தாலியை திருப்பனும் ,

இப்படியான கனவுகளை சுமந்து கொண்டு வெளிநாட்டுக்கு செல்லும் விமானங்களுக்கு எடை அதிகமே..!

பயணம்

ஜோக்கர்...

அடுத்தவன் பிரச்சனைக்கு 1000 ஆலோசனை சொல்றவன்லாம் யாருன்னு பார்த்தா,

சொந்த வீட்ல "உதவாக்கரை"ன்னு பேரு வாங்குனவங்க தான்..!!!

நாகராஜ சோழன் MA. MLA

எதிர்காலத்தில் இந்தியாவில் காஷ்மீர் இருக்காது - வைகோ.

எதிர்காலம் இருக்கட்டும், இப்ப நீங்க எந்த கூட்டணில இருக்கீங்க ?

உள்ளூராட்டக்காரன்

விளையாட்டு வீரர்களின் உடைகளில் கம்பெனி விளம்பரங்களை அச்சடிக்கும் யுத்தி, மளிகைக்கடைக்காரர்களை பார்த்து தோன்றியிருக்க கூடும்

கோழியின் கிறுக்கல்!!

திருமண வாழ்விற்கு மட்டும் நீயூட்டனின் மூன்றாம் விதி பொருந்தி போவதில்லை!

ஒவ்வொரு வினைக்கும் பல மடங்கு அதிகமான எதிர்வினையே வருகிறது!!

மெத்த வீட்டான்

பந்தியில் சாப்பிடாமல் நமக்காக வெயிட் பண்ணும் ஒரு நண்பனையாவது சம்பாதித்து விட வேண்டும் !

உள்ளூராட்டக்காரன்

காஷ்மீர் குறித்து எதுவும் தெரியாமல் நடிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் - தமிழிசை

ஒரு சூப்பர் ஸ்டார் என்றும் பாராமல்...

A.P.Perumal.

பிரதமர் மோடிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பேன் - ரவீந்திரநாத்

அண்ணனுக்கு ஒரு மந்திரி பதவி பார்சல்.

கருப்பு கருணா

எதிரே இருப்பவர் யார் என்று பார்க்காதே...

அடித்து நொறுக்கு என்றான் கிருஷ்ணன்..

அடித்து நொறுக்கினான் அர்ஜுனன்..

தூள் தூள் ஆனது காஷ்மீர்..

இதுவும் ஒரு பாரதக் கதைதான்.

ஜோக்கர்...

எப்படி சின்ன வயசுல பின்னாடி இருக்கிற விடைக்கு ஏத்த மாதிரி கணக்கை கொண்டு வருவமோ,

அதே மாதிரி பிரச்சினைக்கு காரணமே கணவர்ங்கிற மாதிரி சண்டையை கொண்டு வர்றதுதான் மனைவியோட புத்திசாலித்தனம்..!!!

myck

தலைவர் தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா?

என்னது?

தமிழ்நாட்டுல எல்லா வசதியும் உள்ள ஜெயில் எதுன்னு?

ஊர்க்காவலன்

பகல் பொழுதின் நெடுந்தூர பேருந்து பயணத்தில் தூக்கத்தை இரசிப்பதா இயற்கையை இரசிப்பதா என்ற போட்டியில் பெரும்பாலும் தூக்கமே ஜெயித்துவிடுகிறது.....

A.P.Perumal.

நாசா முன்னாள் வீரர் டான் தாமஸ் இந்தியா வருகை.

நம்ம உள்ளூர் விஞ்ஞானி செல்லூர் ராஜீவுடன் சந்திப்பு உண்டா?

கிப்சன்

ரஜினி சினிமாவை மட்டுமே விரும்புகிறார் அரசியலை விரும்பவில்லை

அதனால தான் அவரு சினிமாவில் மட்டுமே மக்களுக்கு பிடித்த மாதிரி பேசுகிறார்

அவரு சரியான பாதையில் தான் போறாரு நாம தான் குறுக்க மறுக்க போறோம்

மாஸ்டர் பீஸ்

திங்கள் விடுமுறை கொண்ட ஞாயிறு இரவுகள்தான் எவ்வளவு அழகானவை...

ஜால்ரா காக்கா

பிரதமர் மோடிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பேன் - ரவீந்திரநாத்

//அடேய்ங்கப்பா தாய் எட்டு அடி பாஞ்சா குட்டி 16 அடி பாயும் போல..

மெத்த வீட்டான்

இருக்க இருக்க ரஜினிக்கு வேலை கூடிக்கிட்டே இருக்கு

முன்னாடி மோடியை மட்டும் புகழ்ந்தாரு

இப்ப அமித்ஷாவையும் !

பர்வீன் யூனுஸ்

காஷ்மீர் குறித்து எதுவும் தெரியாமல் நடிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் - தமிழிசை

விடுங்க..இனி அங்கே ஷூட்டிங் போவாங்க இல்ல..அப்ப தெரிஞ்சிக்குவாங்க.

-லாக் ஆஃப்


மேலும் படிக்க


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon