மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

வெடிச் சத்தம்: பற்றி எரிந்த சரக்கு கப்பல்!

வெடிச் சத்தம்: பற்றி எரிந்த சரக்கு கப்பல்!

விசாகப்பட்டினம் துறைமுகம் அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலிலிருந்த 29 பேரில் 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நின்றுகொண்டிருந்த ஜாகுவார் சரக்கு கப்பலில் திடீரென இன்று (ஆகஸ்ட் 12) காலை 11.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவியுள்ளது. கப்பலிலிருந்து கரும்புகை வெளியேறத் தொடங்கியதை அடுத்து, அப்பகுதியிலிருந்த இந்தியக் கடலோர காவல்படை கப்பல் ராணி ராஷ்மோனி மீட்புப் பணிக்காகத் திருப்பிவிடப்பட்டது.

இதற்கிடையே தீ விபத்திலிருந்து தப்பிப்பதற்காகக் கப்பலிலிருந்த 29 பேரும் கடலில் குதித்துள்ளனர். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 28 பேரை மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாயமான ஒருவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கப்பலில் எரியும் தீயை அணைக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக ஐ.சி.ஜி.எஸ் சமுத்ரா பகேர்தார், ஐ.சி.ஜி ஹெலிகாப்டர் மற்றும் ஐ.சி.ஜி.எஸ் சி -432 ஆகியவற்றையும் இந்தியக் கடலோர காவல் படை அனுப்பியிருக்கிறது. இதற்கிடையில் ஜாகுவார் கப்பலிலிருந்து முதலில் பலத்த வெடி சத்தம் வந்ததாகவும், அதனைத்தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. எனினும் தீயை முழுமையாக அணைத்து அந்த கப்பலை ஆய்வு செய்த பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


மேலும் படிக்க


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon