மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஆக 2019

2030இல் இந்தியா: முகேஷ் அம்பானி கணிப்பு!

2030இல் இந்தியா: முகேஷ் அம்பானி கணிப்பு!

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரம் 10 லட்சம் கோடி டாலர் மதிப்பை எட்டும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 42ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம் இன்று (ஆகஸ்ட் 12) மும்பையின் பிர்லா மதுஸ்ரீ சபாகரில் நடந்து வருகிறது. இதில், நிறுவனத்தின் செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள், ரிலையன்ஸ் ஜியோவின் வளர்ச்சி, ஜியோ போன் 3, ஜியோ ஃபைபர் சேவை தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முகேஷ் அம்பானி பேசினார். அவர் பேசுகையில், “இந்த ஆண்டும் ரிலையன்ஸுக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமையும். இந்தியாவின் தனியார், பொதுத் துறை நிறுவனங்களிலேயே ரிலையன்ஸ் ஜியோதான் மிகப் பெரிய, அதிக வருவாய் ஈட்டும் நிறுவனமாகும். இந்தியாவிலேயே மிகப் பெரிய ஏற்றுமதி நிறுவனமாக ரிலையன்ஸ் திகழ்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஜியோ நெட்வொர்க் சந்தாதாரர் எண்ணிக்கை 34 கோடியாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் ரிலையன்ஸ் ஜியோவில் 10 லட்சம் பேர் புதிதாக இணைந்து வருகின்றனர். ஜியோவுக்கான முதலீட்டுச் சுழற்சி நிறைவடைந்துவிட்டது. அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஜியோ பைபர் சேவை இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும். இச்சேவை 2 கோடி குடியிருப்புகளைச் சென்றடையும். இதற்கான பணிகள் அடுத்த 12 மாதங்களுக்குள் முடிக்கப்படும். ஜியோ பைபர் சேவையில் திட்டங்களுக்கான கட்டணம் ரூ.700 முதல் ரூ.10,000 வரையில் இருக்கும். பிராட்பேண்ட் சேவைகளுக்கு வாழ்நாள் முழுவதும் வாய்ஸ் கால் சேவை இலவசமாக வழங்கப்படும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஆயில் - ரசாயனப் பிரிவின் 20 சதவிகிதப் பங்குகளை சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் கைப்பற்றவுள்ளது. பங்குகளைக் கைப்பற்றியவுடன் அந்த நிறுவனம் தினசரி 5 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை எங்களது சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும். அதேபோல, ரிலையன்ஸ் எரிவாயு சில்லறை விற்பனைப் பிரிவில் நிறுவனத்தின் 49 சதவிகிதப் பங்குகளை இங்கிலாந்தின் பிபி நிறுவனத்துக்கு விற்பனை செய்வதன் மூலம் ரூ.7,000 கோடி வரையில் கிடைக்கும்.

சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் இந்தியாவிலேயே அதிக வரி செலுத்திய நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்தான். ரூ.67,000 கோடிக்கு மேல் ஜிஎஸ்டி செலுத்தியுள்ளோம். விரைவில் ஜியோ போன் 3 விற்பனைக்கு வருகிறது” என்று அறிவித்தார்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பேசிய அம்பானி, “இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் சில துறைகளில் மந்தநிலை காணப்படுகிறது. அது தற்காலிகமானதுதான். 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதார மதிப்பு (ரூ.7,09,97,500 கோடி) 10 லட்சம் கோடி டாலரைத் தாண்டும்” என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


என்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி?


கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

திங்கள் 12 ஆக 2019