மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

விமான நிலைய விபத்து: ஊழியர் படுகாயம்!

விமான நிலைய விபத்து:  ஊழியர் படுகாயம்!

சென்னை விமான நிலையத்தின் மேற்கூரையில் பொருத்தியிருந்த டியூப்லைட் விழுந்ததில் ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையத்தில் கண்ணாடிகள், மேற்கூரைகள் கீழே விழும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. இதுவரை 86 முறையாக கண்ணாடிகள் இடிந்து விழுந்திருக்கின்றன. இதில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் நடக்கவில்லை. ஆனால், பயணிகள், பாதுகாப்பு வீரர்கள், பணிபுரிவோர் என 15க்கும் மேற்பட்ட நபர்கள் இதுவரை காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் மேற்கூரையில் பொருத்தியிருந்த டியூப்லைட் நேற்று கீழே விழுந்துள்ளது. இதனால் அங்கே பணிபுரிந்து கொண்டிருந்த ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர் வீரமணி என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீரமணியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேற்கூரையில் பொருத்தியிருந்த டியூப்லைட் கீழே விழுந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


மேலும் படிக்க


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


என்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி?


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon