மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

மதுபான ரெய்டு: திமுக-அதிமுக டார்கெட் யார்?

மதுபான ரெய்டு: திமுக-அதிமுக டார்கெட் யார்?

தமிழகத்தில் நடத்தப்பட்ட மதுபான தொழிற்சாலை தொடர்பான ரெய்டில் 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

வருமான வரித்துறை ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று, தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பியர் மற்றும் ஐ.எம்.எஃப்.எல்.(இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது) தயாரிப்பு நிறுவனத்தில் சோதனைகள் நடத்தியது. சென்னை, கோவை, தஞ்சாவூர், மற்றும் கேரளா, ஆந்திரா, கோவா உள்ளிட்ட இடங்கள் என சுமார் 55 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

பல மாதங்களாக சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆகஸ்டு 10 ஆம் தேதி இரவு வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தது. இரண்டு மதுபான ஆலைகள் இந்த ரெய்டில் சிக்கியுள்ளன. இந்த ஆலைகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் இருந்து, வருமான வரித் துறைக்கு கணக்கு காட்டாத 700 கோடி ரூபாய் பணம் கண்டறியப்பட்டிருக்கிறது.

தேடல் நடவடிக்கையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில், வருமான வரித் துறை அதிகாரிகள் கணக்கில்வராத பணத்துடன் மது பான ஆலையில் வேலை செய்த ஊழியர்கள் காரில் தப்பிச் செல்வதை அறிந்துள்ளனர். அவர்களின் நகர்வை முன்னரே கண்டறிந்து, காரில் இருந்து ரூ .4.5 கோடி பணத்தை மீட்டெடுத்துள்ளது அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு மதுபான ஆலைகளும் தமிழ்நாட்டில் உள்ள ஆளும் கட்சியான அதிமுக-க்கும் எதிர்கட்சியான திமுக-வுக்கும் பணப்பரிமாற்றம் நிகழ்த்தியுள்ளது தெரியவந்துள்ளது. நடத்தப்பட்ட ரெய்டில், அதிமுக-திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தேர்தல் நிதி மட்டுமல்லாமல், அவ்வப்போது நடைபெற்ற பணப்பரிமாற்ற ஆவணங்களும் சிக்கியுள்ளன. இதனால் வருமான வரித் துறையின் நடவடிக்கை எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியில் கொடுக்கப்படும் ‘சிக்னலை’ பொருத்து வருமானத் வரித் துறையின் அடுத்த ‘மூவ்’ இருக்கும் எனத் தெரிகிறது. சிக்னலில் முதலில் சிக்கப் போவது திமுக பிரமுகர்களா? இல்லை அதிமுக பிரமுகர்களா என இச்சோதனையின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தெரிய வரும்.


மேலும் படிக்க


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


என்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி?


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon