மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

இஸ்ரோவின் தந்தைக்கு இன்று பிறந்தநாள்!

இஸ்ரோவின் தந்தைக்கு இன்று பிறந்தநாள்!

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் விக்ரம் அம்பாலால் சாராபாயின் 100ஆவது பிறந்த நாளான இன்று, அவரைக் கௌரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டுள்ளது.

சந்திரயான், மங்கள்யான் போன்ற விண்கலன்களை வெற்றிகரமாகச் செலுத்தி வின்வெளித் துறையில் உலகளவில் பெரும் சாதனைகளைப் புரிந்துவரும் இந்திய வின்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) மிகப்பெரிய முன்னோடியாகத் திகழ்ந்தவர் இஸ்ரோவின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் விக்ரம் சாராபாய். இன்று (ஆகஸ்ட் 12) அவருக்கு 100ஆவது பிறந்தநாள். அவரைச் சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் அவரது புகைப்படத்துடன் இன்று டூடுள் வெளியிட்டு கௌரவப்படுத்தியுள்ளது.

விக்ரம் சாராபாய் கடந்த 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி அகமதாபாத்தில் பிறந்தார். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தொழில் துறையில் ஈடுபடாமல் அவரது ஆர்வம் முழுவதும் இயற்பியலின் மீதே இருந்தது. இங்கிலாந்தில் இயற்பியல் ஆராய்ச்சியை முடித்து டாக்டர் பட்டம் பெற்றார். அதன் பின்னர் அகமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை 1947ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி நிறுவினார். பின்னர், குடும்பத்தினருடன் சேர்ந்து தனது 28ஆவது வயதிலேயே ஆராய்ச்சி அறக்கட்டளை ஒன்றையும் நிறுவினார்.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டா விண்ணில் ஏவப்பட்டதற்கு முழுக் காரணமே இவர்தான். SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி’ மூலம் 24,000 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச் செல்ல உதவினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை விரிவாக்கம் செய்தார். பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ள இவர், 1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி உயிரிழந்தார்.


மேலும் படிக்க


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


என்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி?


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon