மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

திருவாரூர் : மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

திருவாரூர் : மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாரூரில் இலவங்கார்குடி அரசு மருத்துவமனையில் விவசாயி காமராஜ் என்பவர் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரின் மகன் தாமரைச்செல்வன் தந்தை இறந்ததற்குக் காரணம் நீங்கள் தான் என கூறி பணியிலிருந்த மருத்துவர் பிரபா மற்றும் பயிற்சி மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்.

இதனையடுத்து மருத்துவர்கள் கொடுத்த புகாரின் பேரில் தாமரைச்செல்வன் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து அம்மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் தங்களது பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் இன்று (ஆகஸ்ட் 12) காலை தாமரைச் செல்வனை அவரது இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.


மேலும் படிக்க


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


என்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி?


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon