மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

காஷ்மீர்: பிபிசி விளக்கம்!

காஷ்மீர்: பிபிசி விளக்கம்!

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் நிலைமைகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் பிபிசி, கார்டியன் உள்ளிட்டவை செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து காஷ்மீர் முழுக்க முழுக்க இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இணைய இணைப்புகள் தொலைபேசி இணைப்புகள் காஷ்மீருக்குள் துண்டிக்கப்பட்ட நிலையில் அங்கு என்ன நடக்கிறது என்பதை வெளியில் யாரும் அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தான் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய அரசின் முடிவை எதிர்த்து காஷ்மீர் இளைஞர்கள் வீதிகளில் திரண்டு போராடி வருவதாக பிபிசி ஒரு வீடியோவை வெளியிட்டது.

இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதைத் தொடர்ந்து பிபிசி ட்விட்டர் பக்கத்தில் ஒரு விளக்கத்தை நேற்று வெளியிட்டுள்ளது.

"பிபிசி தனது இதழியலில் உறுதியாக இருக்கிறது. காஷ்மீர் பற்றி நாங்கள் தவறான செய்திகளை அளிக்கிறோம் என்ற கூற்றுகளை நாங்கள் உறுதியாக மறுக்கிறோம்.

காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை பாகுபாடு எதுவும் இன்றியும் துல்லியமாகவும் வழங்கி வருகிறோம்.

மற்ற ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு இருக்கும் அதே தடைகள் வரம்புகள் எங்களுக்கும் காஷ்மீரில் இருக்கின்றன.ஆனால் காஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தொடர்ந்து நாங்கள் செய்திகளாக பதிவு செய்வோம்" என்று பிபிசி விளக்கம் அளித்துள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


என்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி?


வேலூர்: தேர்தல் முடிவை மாற்றிய சீமான்


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon