மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

சோனியாவை தேர்ந்தெடுக்கக் காரணம்?

சோனியாவை தேர்ந்தெடுக்கக் காரணம்?

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றது தொடர்பாக கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்ததால் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் இந்தப் பதவியை வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் காரியக் கமிட்டி கூட்டத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சோனியா காந்தி நிதானமும் தெளிவும் மிக்கவர். தற்போது அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி கொள்கை ரீதியான வேறுபாடுகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன. அந்த வேறுபாடுகளோடு சமர்புரியும் ஒரு தலைவராக சோனியா இருப்பார். அவருடைய வருகை எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

சோனியா காந்தியை மீண்டும் தேர்ந்தெடுக்க காரணம் என்னவென்ற கேள்விக்கு, “காங்கிரஸ் ஒரு மிகப்பெரிய ஜனநாயக இயக்கம். நாடு முழுவதுமுள்ள 750 காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றுகூடி சோனியா காந்தியே மீண்டும் தலைவராக வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதனடிப்படையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் தலைவராகவில்லை. காங்கிரஸ் என்னும் ஒரே குடும்பத்திலிருந்து அவர் தலைவராகியுள்ளார். சோனியா கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்” என்று விளக்கினார்.

வைகோ குறித்த கேள்விக்கு, “வைகோவுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் பிரச்சினையை கொண்டுவராதீர்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் ஒரு கருத்தைச் சொன்னார். அதற்கு நாங்கள் பதில் சொல்லிவிட்டோம். அதோடு அந்த பிரச்சினை முடிந்துவிட்டது. எனவே புதிதாக ஒரு பிரச்சினையை உருவாக்க வேண்டாம்” என்று பதிலளித்தார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


வேலூர்: தேர்தல் முடிவை மாற்றிய சீமான்


எடப்பாடி அமைச்சரவையில் புதிய அமைச்சர் யார்?


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


விஜய் பட ஷூட்டிங்: விபத்தில் சிக்கியவர் மரணம்!


ஞாயிறு, 11 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon