மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

காஷ்மீர்: அமித் ஷாவுக்கு ரஜினிகாந்த் பாராட்டு!

காஷ்மீர்: அமித் ஷாவுக்கு ரஜினிகாந்த் பாராட்டு!

காஷ்மீர் விவகாரத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா எடுத்த நடவடிக்கைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடுவின் லிசனிங், லேர்னிங் & லீடிங் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஆகஸ்ட் 11) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் காஷ்மீரை இரண்டாகப் பிரித்ததற்காக அமித்ஷா வுக்கு பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்வில் ரஜினிகாந்த் பேசுகையில், “வெங்கைய்ய நாயுடுவுடன் ஒருநாள் தனியாக பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தப்பித் தவறி அரசியல்வாதியாகிவிட்டார் என்று அப்போதுதான் தெரிந்துகொண்டேன். அவர் ஒரு முழுமையான ஆன்மிகவாதி. மக்கள் மீது அவருக்கு இருக்கும் அக்கறையைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டேன். அவர் இன்னும் உயரிய பதவிகள் வகிக்க வேண்டுமென ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும், “விஷன் காஷ்மீர் ஆப்ரேஷனுக்காக உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதொடர்பான அவரின் நாடாளுமன்ற உரை மிகவும் சிறப்பாக இருந்தது. யார் இந்த அமித் ஷா என்று மக்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். அதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பிரதமர் மோடியும் அமித் ஷாவும் கிருஷ்ணரையும் அர்ஜுனரையும் போன்றவர்கள். அதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜூனர் என்று யாருக்கும் தெரியாது. அவர்களுக்கு மட்டுமே அது தெரியும்” என்றும் புகழ்ந்தார்.

ஞாயிறு, 11 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon