மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 31 மே 2020

700 கோடி ரூபாய் ஏமாற்றிய மதுபான ஆலைகள்: வருமான வரித்துறை

700 கோடி ரூபாய் ஏமாற்றிய மதுபான ஆலைகள்: வருமான வரித்துறை

தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு 6 ஆம் தேதி நடத்தப்பட்ட மதுபான தொழிற்சாலை தொடர்பான ரெய்டில் 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆகஸ்டு 10 ஆம் தேதி இரவு வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“வருமான வரித்துறை கடந்த ஆகஸ்டு 6 ஆம் தேதி பீர் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபான தயாரிப்பு நிறுவனத்தில் சோதனைகள் நடத்தியது. சென்னை, கோவை, தஞ்சாவூர், மற்றும் கேரளா, ஆந்திரா, கோவா உள்ளிட்ட இடங்கள் என சுமார் 55 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

குறிப்பிட்ட அந்த மதுபான ஆலை நிறுவனம் ஏராளமான அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து வருவதாக பல மாதங்களாக உளவுத்துறைக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 400 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது.

ஆகஸ்டு 9 ஆம் தேதி இன்னொரு மதுபான நிறுவனத்தின் சென்னை, காரைக்கால் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 300 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரு சோதனைகளில் இருந்தும் வருமான வரி துறைக்கு கணக்கு காட்டாத 700 கோடி ரூபாய் பணம் கண்டறியப்பட்டிருக்கிறது” என்று வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்டு 6 ஆம் தேதி எஸ் என் ஜே மதுபான ஆலை தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது என்பது குறிப்பிடத் தக்கது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


வேலூர்: தேர்தல் முடிவை மாற்றிய சீமான்


சென்னை மெட்ரோ: 2.5 நிமிடத்துக்கு ஒரு ரயில்!


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


விஜய் பட ஷூட்டிங்: விபத்தில் சிக்கியவர் மரணம்!


ஞாயிறு, 11 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon