மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

நீதிமன்றங்கள் சூதாட்டக் களமல்ல: உயர் நீதிமன்றம் கண்டனம்!

நீதிமன்றங்கள் சூதாட்டக் களமல்ல: உயர் நீதிமன்றம் கண்டனம்!

தொழிலாளர் நீதிமன்றங்கள் சூதாட்டக் களமல்ல எனச் சென்னை உயர் நீதிமன்றம் மனுதாரருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

உரிய விடுப்பு அனுமதி இன்றி 10 மாதங்கள் விடுப்பு எடுத்ததால் சென்னை மாநகராட்சி பென்சிலய்யா என்பவரைப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. 1990 ஜூன் மாதம் முதல் 1991 ஏப்ரல் வரை பென்சிலய்யா மாநகராட்சியின் உரிய அனுமதி இல்லாமல் விடுப்பு எடுத்ததற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பென்சில்லயா தன் மீதான நடவடிக்கைக்கு உடனடியாக வழக்கு தொடராமல் 14 ஆண்டுகள் கழித்து 2007ஆம் ஆண்டு சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த 2ஆவது கூடுதல் தொழிலாளர் நீதிமன்றம், 2012இல் தீர்ப்பு வழங்கியது. பென்சிலய்யாவின் பணி நீக்கத்தை உறுதி செய்து அவர் 50,000 சென்னை மாநகராட்சிக்கு இழப்பீடு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று (ஆகஸ்ட் 10) நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பணி நீக்கத்தை எதிர்த்து 14 ஆண்டுகள் கழித்து வழக்கு தொடர, தொழிலாளர் நீதிமன்றம் ஒன்றும் சூதாட்டக் களமல்ல என நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

பணி தொடர்பான வழக்குகளை மூன்று ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தொழில் தகராறு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, பென்சிலய்யாவை பணி நீக்கம் செய்த உத்தரவை உறுதி செய்தும், அவருக்கு விதிக்கப்பட்ட 50,000 ரூபாய் அபராத தொகையை 2012 முதல் ஆண்டுக்கு 6 சதவிகித வட்டியுடன் 15 நாட்களுக்குள் சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.


மேலும் படிக்க


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


விஜய் பட ஷூட்டிங்: விபத்தில் சிக்கியவர் மரணம்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


புறக்கணிக்கப்படுகிறதா தமிழ் சினிமா?


பன்னீரும் அமித் ஷாவும்: தோல்விக்கு காரணம் சொல்லும் எடப்பாடி


ஞாயிறு, 11 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon