மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 21 நவ 2019

தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்

தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்

தினகரன் போட்ட உத்தரவால் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அமமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பனின் மகள் யாழினிக்கும், கரூர் பாலாஜி தியேட்டர் உரிமையாளர் டாக்டர் விஜயானந்த்க்கும் ஆகஸ்ட் 12ஆம் தேதி டிடிவி தினகரன் தலைமையில் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணியை பழனியப்பன் ஒரு மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டார்.

பழனியப்பன் அமமுகவில் இருந்தாலும் சமுதாய ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் அமைச்சர்கள் உள்பட அவருடைய பல நண்பர்கள் அதிமுகவில் உள்ளனர். பழனியப்பனின் மகள் திருமணத்திலோ அல்லது வரவேற்பிற்கோ நட்பின் அடிப்படையில் அதிமுகவிலிருந்து சில அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் வருவதாய் இருந்தனர். அதில் ஒரு சிலர் பழனியப்பனை நேரடியாகவே தொடர்புகொண்டு திருமண வேலைகள் எப்படியிருக்கிறது என்று விசாரித்துவிட்டு எங்களுக்கும் கொஞ்சம் வேலைகளை பிரித்துக் கொடுக்கலாமே என்று ஜாலியாக கேட்டிருக்கிறார்கள். மேலும், மறக்காமல் திருமண அழைப்பு கொடுங்கள் என்றும் கூறியுள்ளனர்.

இதுபோலவே பழனியப்பனும் கட்சி வேறு, நட்பு வேறு என்பதன் அடிப்படையில் மகள் திருமணத்திற்கு அனைவரையும் அழைக்கவேண்டும் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தார். சில அதிமுக விஐபிக்களுக்கு அழைப்பிதழ் அளிக்க வேண்டுமென பழனியப்பன் குடும்பத்தினரே அவருக்கு அழுத்தம் தந்துள்ளனர்.

இந்த நிலையில் வானகரத்தில் கடந்த 4ஆம் தேதி நடந்த அமமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தினகரன், “நமது இயக்கத்தைச் சேர்ந்த எத்தனையோ பேர் ஆளும்கட்சிக் காரர்கள் வீட்டுத் திருமணங்களுக்குச் செல்வதும், அமைச்சர்களுடன் சுமூகமாக உறவு வைத்துக்கொண்டும் இருக்கின்றனர்.நமக்கு எப்படி திமுக எதிரியோ, அப்படி இந்த துரோகிகளையும் ஒரு கை பார்க்க வேண்டும். அமைச்சர் பத்திரிகை கொடுத்ததால் சென்றோம் என காரணம் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இரு தரப்பினரிடமும் உறவுகள் வைத்துக்கொள்ளக்கூடாது. கல்யாணம், காதணி விழா என்று யாரும் கலந்துகொள்ளக்கூடாது. நாமும் அழைக்கக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

மகள் திருமணத்திற்கான அனைவருக்கும் பத்திரிகைகள் வைத்து வரும் பழனியப்பன், இப்படிப்பட்ட ஒரு அறிவிப்பை தினகரனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இதுகுறித்து தனது நெருக்கமானவர்களிடம், “அதிமுகவில் உள்ள பழைய நண்பர்களை அழைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தினகரன் இவ்வாறான ஒரு உத்தரவை போட்டிருக்கிறார்” என்று கூறி புலம்பியுள்ளார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெற்றிக்கு திமுக திணறியது ஏன்?


திமுகவை முந்தித் தள்ளிய முஸ்லீம்கள்: வேலூர் நிலவரம்!


கலைஞர் சிலை திறப்பு பொதுக்கூட்டம்: வருத்தத்தில் வைகோ


மணிகண்டனை கண்டு கொள்ளாத ஓ.பன்னீர்



வருகிறார் 90’ஸ் ரஜினி?


சனி, 10 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon