மின்னம்பலம்
மாதவன் முதன்முறையாக இயக்கி நடிக்கும் ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் பணியாற்றிய விஞ்ஞாணி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் மாதவன் நம்பி நாராயணனாக நடிக்கிறார். பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்குப் பிறகு மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் நடித்த ரான் டொனச்சியும், டௌண்டன் அப்பே தொடரில் நடித்து பிரபலமான பிள்ளிஸ் லோகனும் இணைந்து நடித்துள்ளனர். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் மாதவனும், சூர்யாவும் இணைந்து நடித்திருந்தனர். அதைத் தொடர்ந்து இந்தப் படத்தில் இருவரும் சேர்ந்துள்ளனர்.
படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரம் தனது கதையை சூர்யாவிடம் கூறுவது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து பிளாஷ் பேக் காட்சிகள் விரிவதாக உருவாகிறது.
ட்ரை கலர் பிலிம்ஸ், விஜய் மூலன் டாக்கீஸ், சஃப்ரான் கணேஷா என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிவருகிறது. சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.
மேலும் படிக்க
டிஜிட்டல் திண்ணை: வெற்றிக்கு திமுக திணறியது ஏன்?
திமுகவை முந்தித் தள்ளிய முஸ்லீம்கள்: வேலூர் நிலவரம்!
கலைஞர் சிலை திறப்பு பொதுக்கூட்டம்: வருத்தத்தில் வைகோ
மணிகண்டனை கண்டு கொள்ளாத ஓ.பன்னீர்