மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

காமெடியை நம்பும் தினேஷ்

காமெடியை நம்பும் தினேஷ்

அட்டகத்தி தினேஷ் நடிக்கும் புதிய படம் காமெடி கலந்த காதல் கதையாக உருவாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் கோபி இயக்கும் இந்தப் படத்திற்கு ‘நானும் சிங்கிள் தான்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தீப்தி திவேஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறாத நிலையில் உடனடியாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில் காதல், காமெடி என பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்தப் படம் தயாராகவுள்ளது. லண்டனில் உள்ள தமிழ் டான் கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார்.

டேவிட் ஆனந்தராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையமைத்துள்ளார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ஜெயக்குமார் தயாரித்துள்ளார்.

சென்னை, லண்டன் மற்றும் ஐரோப்பாவில் பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. தற்போது இறுதிகட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் இப்படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


மேலும் படிக்க


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


விஜய் பட ஷூட்டிங்: விபத்தில் சிக்கியவர் மரணம்!


புறக்கணிக்கப்படுகிறதா தமிழ் சினிமா?


அதிமுக தோல்விக்குக் காரணம் யார்? தலைமைக் கழகத்தில் நடந்த விவாதம்!


டிஜிட்டல் திண்ணை: வெற்றிக்கு திமுக திணறியது ஏன்?


சனி, 10 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon