மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

பன்னீரும் அமித் ஷாவும்: தோல்விக்கு காரணம் சொல்லும் எடப்பாடி

பன்னீரும் அமித் ஷாவும்: தோல்விக்கு காரணம் சொல்லும் எடப்பாடி

மக்களவைக் கூட்டத் தொடரின் போது துணை முதல்வர் ஓ.பி.எஸ், மகனும் அதிமுக எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமார் முத்தலாக் மசோதாவை ஆதரித்திருந்தார். அதுபோன்று உள் துறை அமைச்சர் அமித் ஷா வேலூர் தேர்தல் அன்று காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமானவர்களிடம், ”முத்தலாக் மசோதாவ ஆதரிச்சு பன்னீர் மகன் பாதி முஸ்லீம் ஓட்டு கிடைக்காம பன்னிட்டாரு. எலெக்க்ஷன் அன்னைக்கு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த கேன்சல் பண்ணி, அத ரெண்டா பிரிச்சி மீதி ஓட்ட அமித் ஷா காலி பன்னிட்டாரு” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேலூர் மக்களவைத் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் 8121 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இருந்தாலும் 6 சட்டமன்றத் தொகுதிகளில், குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு ஆகிய 3 இடங்களில் அதிமுக அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது” என்றார்.

முத்தலாக் மற்றும் காஷ்மீர் விவகாரத்தை ஆதரித்ததால், வேலூரில் சிறுபான்மையினர் வாக்கு அதிமுகவுக்கு கிடைக்கவில்லையா என்ற கேள்விக்கு, “வாக்கு யாருக்கு அளிக்க வேண்டும் என்பது ரகசியமான ஒன்று. அப்படி இருக்கும் போது சிறுபான்மையின மக்கள் வாக்களித்தார்களா, பெரும்பான்மையினர் வாக்களித்தார்களா என்பது யாருக்கு தெரியும் என்று கேள்வி எழுப்பினார். தமிழகம் ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட ஒரு மாநிலமாகும். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். இதில் அதிமுக பெரும்பான்மையான இடத்தில் வெற்றி பெறும் என்றார். நீலகிரி கோவை பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில் அங்கு அமைச்சர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

இன்று காலை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்க குட்டிகளுக்கு பிரதீப், தட்சிணா, நிரஞ்சனா எனவும், புலி குட்டிகளுக்கு வெண்மதி, யுகா, மித்ரன், ரித்விக் என்று முதல்வர் பெயர் சூட்டினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.


மேலும் படிக்க


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


விஜய் பட ஷூட்டிங்: விபத்தில் சிக்கியவர் மரணம்!


புறக்கணிக்கப்படுகிறதா தமிழ் சினிமா?


அதிமுக தோல்விக்குக் காரணம் யார்? தலைமைக் கழகத்தில் நடந்த விவாதம்!


டிஜிட்டல் திண்ணை: வெற்றிக்கு திமுக திணறியது ஏன்?


சனி, 10 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon