மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

தமிழ் சினிமா 2019: சறுக்கியதும் சாதித்ததும்!

தமிழ் சினிமா 2019: சறுக்கியதும் சாதித்ததும்!

இராமானுஜம்

தமிழ் சினிமா ஒவ்வொரு வருடமும் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது ஒவ்வொரு வருட முடிவிலும் வருகிற புத்தாண்டு தமிழ் சினிமாவிற்கு லாபகரமான ஆண்டாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது தமிழ் சினிமாவில் வாடிக்கை.

2019ஆம் ஆண்டில் தமிழ் சினிமா கடந்து வந்த முதல் 6 மாதங்களில் 103 நேரடித் தமிழ் படங்கள் வெளியிடப்பட்டன. இவற்றில் வெற்றி எத்தனை, சராசரி வெற்றி படங்கள் எத்தனை, அசல் தேறிய படங்கள் எத்தனை, திரையரங்குகளுக்கு படம் பார்க்கும் பார்வையாளர்களை அழைத்து வந்த படங்கள் எத்தனை, வெளியான 103 படங்களில் பிரம்மாண்டமான பட்ஜெட் படங்கள் ஏற்கனவே பல்வேறு வெற்றிகளை கொடுத்து தங்களுக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர்கள் நடித்த படங்கள் வியாபார ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றதா என்பதை திரும்பிப் பார்க்கும் தொடர் இது.

உலகம் முழுமையும் திரையரங்குகளில் புதிய படங்கள் என்ன வசூல் செய்திருக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் சினிமா தொழிலோடு நேரடித் தொடர்பில்லாத சாமானியர்கள் கூட அறிந்து கொள்ளும் அளவிற்கு விஞ்ஞான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உலகத்தை சுருக்கி இருக்கிறது.

இந்தியாவில் மற்ற எல்லா மாநில மொழிப் படங்களின் வசூலை நம்மால் அறிந்து கொள்ள முடியும். ஆனால் தமிழ் படங்களின் பட்ஜெட்டையும் அதன் வியாபார விவரங்களையும் அறிந்து கொள்வது இயலாத காரியமாகவே இன்று வரை தொடர்ந்து வருகிறது

கடந்த ஆறு மாதங்களில் வெளியான பல்வேறு படங்களை மூன்றாவது நாளே மாபெரும் வெற்றி, வசூல் சாதனை என கொண்டாட்டங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

இவையெல்லாம் உண்மைதானா, வெளியான படங்களை உண்மையிலேயே தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் என முத்தரப்பினருக்கும் லாபகரமாக அமைந்த படங்கள்; படத்தை வாங்கியவர்களுக்கு லாபம் இல்லை என்றாலும் தயாரிப்பாளருக்கு லாபத்தைக் கொடுத்த படங்கள்; தயாரிப்பாளருக்கு லாபம் இல்லை ஆனால் படம் வாங்கியவருக்கு லாபம்; தயாரிப்பாளர் வினியோகஸ்தர்களுக்கு லாபம் இல்லை ஆனால் அப்படத்தை திரையிட்ட திரையரங்குகளுக்கு மட்டும் லாபம் என்று நான்கு வகையாக பட்டியலிட முடியும்.

இன்றைக்கு வலைதளங்களிலும் முகநூல் பக்கங்களிலும் டிவிட்டர்களிலிம் படம் வெளியான நாள் அன்று ஒரு படத்தினுடைய வசூல் விபரங்களை வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது

இந்த சூழலில் பாரபட்சமின்றி உண்மைக்கு மிக நெருக்கமாக 2019 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வெளியான நேரடித் தமிழ்ப்படங்களின் வெற்றி, தோல்வியை தொடராக பார்க்கலாம்.

இதில் முதலாவதாக இடம் பெறும் பேட்டை - விஸ்வாசம் படங்களின் வசூல் நிலவரங்கள் நாளை


மேலும் படிக்க


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


அதிமுக தோல்விக்குக் காரணம் யார்? தலைமைக் கழகத்தில் நடந்த விவாதம்!


புறக்கணிக்கப்படுகிறதா தமிழ் சினிமா?


டிஜிட்டல் திண்ணை: வெற்றிக்கு திமுக திணறியது ஏன்?


தீபாவளிக்கு தனுஷின் டபுள் ட்ரீட்!


சனி, 10 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon