மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

காங்கிரஸ் புதிய தலைவராக தலித்? முன்னிலையில் முகுல் வாஸ்னிக்

காங்கிரஸ் புதிய தலைவராக தலித்? முன்னிலையில் முகுல் வாஸ்னிக்வெற்றிநடை போடும் தமிழகம்

புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து கடந்த மே 30ஆம் தேதியன்று ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்யக்கூடாது என்று மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் வலியுறுத்தியும் அவர் தனது முடிவை கைவிடவில்லை. ராகுல் ராஜினாமா செய்தபின் புதிய தலைவரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

பிரியங்கா காந்தி தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டுமென சில தலைவர்கள் ஊடகங்களில் விருப்பம் தெரிவிக்க, நேரு குடும்பத்தைச் சேராதவர்தான் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று ராகுல் காந்தி வலியுறுத்துவதாக காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது.

இந்த சூழலில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் டெல்லியிலுள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 10) காலை 11 மணிக்கு தொடங்கியது. அதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, கே.சி.வேணுகோபால், குலாம் நபி ஆசாத், மீரா குமார், ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி, முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் காரியக் கமிட்டி குழுவானது வடக்கு, மேற்கு, கிழக்கு, வடகிழக்கு, தெற்கு என ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்களில் உள்ள தலைவர்கள் தங்களுக்குள் தனித் தனியாக விவாதித்துப் புதிய தலைவரை தேர்வுசெய்யவுள்ளனர். புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே அல்லது முகுல் வாஸ்னிக் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே பட்டியலினத்தைச் சேர்ந்தவர். 77 வயதாகும் இவர் மக்களவை காங்கிரஸ் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

மற்றொரு மூத்த தலைவரான முகுல் வாஸ்னிக், நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் அரசில் அமைச்சராக பதவிவகித்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் மேலிடப் பார்வையாளராகவும் உள்ளார்.மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இவரும் பட்டியல் சமூதாயத்தைச் சேர்ந்தவர்தான். முகுல் வாஸ்னிக்கின் தந்தை பாலகிருஷ்ண ராமச்சந்திர வாஸ்னிக் இளைஞர் காங்கிரஸ் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது, அவர் மாணவர் காங்கிரஸில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றினார். மேலும் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் செல்வாக்கான நபராகவும் வலம் வருகிறார்.

நீண்ட பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக உள்ள பலவீனங்களை சரிசெய்ய முகுல் வாஸ்னிக்கே பொருத்தமாக இருப்பார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல் நடைபெறும் வரை காரியக் கமிட்டியில் நியமிக்கப்படுபவர் காங்கிரஸின் தலைவராக பொறுப்பு வகிப்பார்.

முகுல் வாஸ்னிக் காங்கிரஸுக்கு தலைவராகும் பட்சத்தில் அவரது ஆதரவாளரான காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்புவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


அதிமுக தோல்விக்குக் காரணம் யார்? தலைமைக் கழகத்தில் நடந்த விவாதம்!


புறக்கணிக்கப்படுகிறதா தமிழ் சினிமா?


டிஜிட்டல் திண்ணை: வெற்றிக்கு திமுக திணறியது ஏன்?


தீபாவளிக்கு தனுஷின் டபுள் ட்ரீட்!


சனி, 10 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon