மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஆக 2019

சென்னை மெட்ரோ: 2.5 நிமிடத்துக்கு ஒரு ரயில்!

சென்னை மெட்ரோ: 2.5 நிமிடத்துக்கு ஒரு ரயில்!

சென்னை மெட்ரோவில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் மெட்ரோ நிர்வாகம் ஒரு புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.

சென்னையில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை ஏர்போர்ட் முதல் கோயம்பேடு வரையிலான ரயில் தடம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நகரத்தின் மற்ற பகுதிகளுக்கும் ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் மெட்ரோ ரயில் நிலைய சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காக 10 ரூபாய்க்கு கேப் சேவையை அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக 2.5 நிமிடத்துக்கு ஒரு ரயிலை இயக்கவுள்ளது. மெட்ரோவில் நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். கடந்த புதன் மற்றும் வியாழன் அன்று முறையே 1.16 மற்றும் 1.10 லட்சம் மக்கள் பயணம் செய்திருக்கின்றனர். தற்போது பீக் அவர்ஸ் என கூறப்படும் நேரமான காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8.30 மணி வரையிலான நேரங்களில் 5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சாதாரண நேரங்களில் காலை 6 மணி முதல் 8.30 மணி, 10 மணி முதல் மாலை 5 மணி, இரவு 8.30 மணி முதல் இரவு 10 மணி வரை 7 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த நேரத் திட்டத்தில் மாற்றம் செய்து பீக் அவர்ஸில் 2.5 நிமிடத்துக்கு ஒரு ரயிலை இயக்க மெட்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி இன்று காலை 2.5 நிமிடத்துக்கு ஒரு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ள நிலையில் அடுத்த வாரமும் ஒரு முறை சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது. இதன் வெற்றியைத் தொடர்ந்து 2.5 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


அதிமுக தோல்விக்குக் காரணம் யார்? தலைமைக் கழகத்தில் நடந்த விவாதம்!


புறக்கணிக்கப்படுகிறதா தமிழ் சினிமா?


டிஜிட்டல் திண்ணை: வெற்றிக்கு திமுக திணறியது ஏன்?


தீபாவளிக்கு தனுஷின் டபுள் ட்ரீட்!


வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

சனி 10 ஆக 2019