மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 31 மே 2020

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

66ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிப்பரப்புத் துறை அமைச்சகம் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. வழக்கமாக ஏப்ரல் மாதமே தேசிய விருதுகளுக்கான அறிவிப்பு வெளியாகும். ஆனால், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலினால் இந்தாண்டு 3 மாத கால தாமதத்திற்குப் பின்னேயே வெளியாகியுள்ளது. டெல்லி சாஸ்திரி பவனில் இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகள் பட்டியல் இயக்குநர் ராகுல் ரவாய்ல் தலைமையிலான குழுவினரால் அறிவிக்கப்பட்டது.

மூன்று தேசிய விருதுகள் பெற்ற மகாநடி

இந்தாண்டிற்கான விருதுகள் பட்டியலில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடி’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்ததற்காக கீர்த்தி இவ்விருதைப் பெற்றுள்ளார். சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான மாநில விருதும் இப்படத்திற்கே கிடைத்துள்ளது.

சிறந்த ஆடைவடிவமைப்புக்கான தேசிய விருதையும் மகாநடி படமே பெற்றுள்ளது. இந்திராக்‌ஷி பட்னாயக் இப்படத்தில் பணியாற்றியதற்காக பெற்றுள்ளார்.

தமிழ்ப் படம்

சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பாரம் திரைப்படம் பெற்றுள்ளது. பிரியா கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார். கருணைக் கொலைமீதான மறுபார்வையை பேசும் இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துள்ளது. வேறு தமிழ் படங்கள் எதுவுமே தேர்வு செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

சண்டைப் பயிற்சிக்கான தேசிய விருதில் கே.ஜி.எஃப்

சிறந்த சண்டைப்பயிற்சிக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது கே.ஜி.எஃப். அன்பறிவ் இப்படத்தில் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

அதே சமயம் சிறந்த ‘ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்’கான விருதை ’ஏவ்’ என்ற தெலுங்குப் படத்துடன் இணைந்து பெறவுள்ளது கே.ஜி.எஃப்.

மூன்று விருதுகளுடன் அந்தாதூன்

அந்தாதூன் திரைப்படத்தில் நடித்த ஆயுஷ்மான் குரானாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இவ்விருதை யுரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் படத்தில் நடித்த விக்கி கெளஷலுடன் பகிர்ந்துள்ளார் குரானா. சிறந்த இந்திப் படத்திற்கான விருதையும் அந்தாதூன் பெற்றுள்ளது. சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதையும் இப்படம் பெற்றுள்ளது.

மற்ற முக்கியமான விருதுகளைப் பெற்ற கலைஞர்கள்

சிறந்த படம்: ஹெல்லாரோ(குஜராத்)

சிறந்த இயக்குநர்: ஆதித்யா தர் (யுரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்)

சிறந்த துணை நடிகர்: ஸ்வனந்தா கிர்கிரே(சும்பக்)

சிறந்த துணை நடிகை: சுரேகா சுக்ரி(பதாஹ் ஹோ)

சிறந்த குழந்தை நட்சத்திரங்கள்: பி.வி.ரோஹித், சமீப் சிங், தல்ஹா அர்ஷத் ரேஷி, ஸ்ரீனிவாஸ் போக்கலே

சிறந்த இசை: சஞ்சய் லீலா பன்சாலி(பத்மாவத்)

சிறந்த பின்னணிப் பாடகர்: அர்ஜித் சிங்(பத்மாவத்), பிந்து மணி( நதிசராமி)

சிறந்த நடன அமைப்பு: கிருதி மகேஷ் மித்யா(பத்மாவத்)

படப்பிடிப்பிற்கான சிறந்த நட்பு மாநிலம்: உத்தரகாண்ட்

சிறந்த ஒளிப்பதிவு: எம்.ஜே.ராதாகிருஷ்ணன்(உலு). இவர் சமீபத்தில் மறைந்த மலையாளத் திரைப்படக் கலைஞராவார்.

சிறந்த ஒலிப்பதிவு: யுரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்.

சிறந்த கலை இயக்கம்: கம்மார சம்பவம்-மலையாளம்

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: பதாய் ஹோ

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படம்: பேட் மேன்


மேலும் படிக்க


திமுகவை முந்தித் தள்ளிய முஸ்லீம்கள்: வேலூர் நிலவரம்!


கலைஞர் சிலை திறப்பு பொதுக்கூட்டம்: வருத்தத்தில் வைகோ


வருகிறார் 90’ஸ் ரஜினி?


மணிகண்டனை கண்டு கொள்ளாத ஓ.பன்னீர்


டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை திட்டிய மணிகண்டனின் ஆடியோ ஆதாரம் - நீக்கம் பின்னணி!


வெள்ளி, 9 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon