மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

கலைஞர் சிலை திறப்பு பொதுக்கூட்டம்: வருத்தத்தில் வைகோ

கலைஞர் சிலை திறப்பு பொதுக்கூட்டம்: வருத்தத்தில் வைகோ

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரும், தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகப் பதவி வகித்தவருமான கலைஞரின் நினைவு நாள் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்திலுள்ள முரசொலி அலுவலக வளாகத்தில், கலைஞரின் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலைஞரின் சிலையைத் திறந்துவைத்தார். அதையடுத்து ராயப்பேட்டையிலுள்ள ஓய்எம்சிஏ திடலில் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.

அதில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, புதுவை முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் மட்டுமே உரையாற்றினர். இறுதியாக ஸ்டாலின் நன்றி தெரிவித்துப் பேசினார். இந்த விழாவில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான வைகோ, கே.எஸ்.அழகிரி, முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட போதிலும் அவர்கள் மேடையில் பேசவில்லை. முதல் வரிசையில் பார்வையாளர்களாக மட்டுமே அமர்ந்திருந்தனர்.

இந்த நிலையில் விழாவில் கலந்துகொண்ட வைகோ தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று புலம்பியிருக்கிறார். மேடை முன்புறத்தில் உட்கார்ந்த வைகோவின் பெயரை மேடையிலிருந்தவர்கள் யாருமே சொல்லவில்லை. சிறப்புரையாற்றிய மம்தா பானர்ஜி மட்டுமே, மறக்காமல் வைகோ பெயரை நினைவுகூர்ந்தார். விழா முடிந்து புறப்பட்ட வைகோ தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘நிகழ்ச்சிக்கு என்னை அழைத்து அழகாக அவமரியாதை செய்துவிட்டார்கள். இவர்கள் எப்போதுமே மாறமாட்டார்கள்’ என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

கலைஞரின் நினைவு நாளில் வைகோவுக்குப் பேச வாய்ப்பளிக்கப்பட்டிருந்தால், கலைஞரின் செயல்பாடுகள் குறித்து சிங்கமென கர்ஜித்து தற்போதைய சூழலில் கலைஞர் எவ்வளவு தேவைப்படுகிறார் என்று மிகவும் அழகாக உரையாற்றியிருப்பார். அவர் உரையாற்றாதது எங்களுக்கு ஏமாற்றமே என்கிறார்கள் மதிமுகவினர்.


மேலும் படிக்க


வருகிறார் 90’ஸ் ரஜினி?


மணிகண்டன் பதவிபறிப்பு ஏன்? பி.ஏ.க்கள் வெளியிடும் ஆடியோ ரகசியம்!


டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை திட்டிய மணிகண்டனின் ஆடியோ ஆதாரம் - நீக்கம் பின்னணி!


இனி நண்பர்களை ஏற்க முடியாது: லடாக் எம்.பி


அமைச்சர் மணிகண்டன் நீக்கம்: எடப்பாடியின் முதல் ஆக்ஷன்!


வெள்ளி, 9 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon