மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஆக 2019

தீபாவளிக்கு தனுஷின் டபுள் ட்ரீட்!

தீபாவளிக்கு தனுஷின் டபுள் ட்ரீட்!

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் அசுரன் படத்தின் வெளியீட்டுத் தேதியை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக்கொண்டு உருவாகிவருகிறது அசுரன். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவருகிறது. கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு பெருமளவில் நடைபெற்றுள்ளது.

இந்தப் படத்தின் மூலம் மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமாகிறார். பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான வட சென்னை வெளியானது. அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி அசுரன் படம் வெளியாவதாக தனுஷ் அறிவித்துள்ளார்.

அதே சமயம் தனுஷ் நடிப்பில் உருவாகும் பட்டாஸ் திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளி வருவதால் அந்த வாரத்தில் வெளியாகும்பட்சத்தில் ஒரே மாதத்தில் தனுஷ் நடிக்கும் இரு படங்கள் திரையரங்கை முற்றுகையிட உள்ளன.

துரை செந்தில்குமார் இயக்கும் பட்டாஸ் திரைப்படத்தில் அப்பா - மகன் என இரு வேடங்களில் தனுஷ் நடித்து வருகிறார். அப்பா கதாபாத்திரத்துக்கு சினேகா நாயகியாகவும், மகன் கதாபாத்திரத்துக்கு மெஹ்ரீன் பிர்ஸாடா நாயகியாகவும் நடித்து வருகின்றனர்.


மேலும் படிக்க


வருகிறார் 90’ஸ் ரஜினி?


மணிகண்டன் பதவிபறிப்பு ஏன்? பி.ஏ.க்கள் வெளியிடும் ஆடியோ ரகசியம்!


டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை திட்டிய மணிகண்டனின் ஆடியோ ஆதாரம் - நீக்கம் பின்னணி!


இனி நண்பர்களை ஏற்க முடியாது: லடாக் எம்.பி


அமைச்சர் மணிகண்டன் நீக்கம்: எடப்பாடியின் முதல் ஆக்ஷன்!


கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

வெள்ளி 9 ஆக 2019