மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஆக 2019

ஆளும்கட்சியினரே அதிகளவு சட்டவிரோத பேனர்கள் வைக்கிறார்கள்: நீதிமன்றம்!

ஆளும்கட்சியினரே அதிகளவு சட்டவிரோத பேனர்கள் வைக்கிறார்கள்: நீதிமன்றம்!

சென்னையில் ஆளும்கட்சியினர்தான் அதிகளவு சட்டவிரோதமாக பேனர் வைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.

சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், பேனர்கள் வைக்கப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில், சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தமிழக அரசு மீது சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு ஜூலை 29ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அதிமுக நிர்வாகி தேவதாஸ் இல்லத் திருமண விழாவுக்காக கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரை முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு பேனர் வைத்த விவகாரம் குறித்து தலைமைச் செயலாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று (ஆகஸ்ட் 7) நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமைச் செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அதிமுக நிர்வாகி தேவதாஸ் இல்லத் திருமண விழாவுக்கு 100 பேனர் வைக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்ததாகவும், அதை மாவட்ட நிர்வாகம் நிராகரித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அரசு தரப்பில், கோயம்பேடு முதல் வானகரம் வரை வைக்கப்பட்டிருந்த 70 பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும், இது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சட்டத்துக்குட்பட்ட விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சட்டவிரோத பேனர்களைத் தடுக்க அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. பேனர்கள் வைக்கப்படும்போது அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருக்கின்றனர். சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதைத் தடுக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். பேனர்கள் வைக்கப்படுவதைத் தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தலைமைச் செயலாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், ஆளும்கட்சியான அதிமுகதான் அதிகளவு பேனர் வைப்பதாக நீதிபதிகள் குற்றம்சாட்டினர்.

சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கக் கூடாது என்று தங்களது நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தும்படி அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையாகத் தகவல் பெற்று மீண்டும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அதிமுகவை பாஜக வளைத்தது எப்படி? சசிகலா வெளியிடும் பகீர்!


சாக்ஷி இருக்க சரவணன் ஏன்?


திமுக பக்கம் சாய்கிறாரா மைத்ரேயன்?


இதற்காகத்தான் காத்திருந்தேன்: விடைபெற்ற சுஷ்மா


அதிமுகவை திமுகவுக்கு விற்கிறார் சத்யா -போராட்டத்தில் அதிமுகவினர்!


ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

வியாழன் 8 ஆக 2019