மின்னம்பலம்
ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில் அவர் நடிக்கும் அடுத்தப் படம் பற்றிய விவரங்கள் வெளியாகிவருகின்றன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தர்பார் ரஜினியின் 167ஆவது படமாகும். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
அரசியலில் இறங்கிய பின்னரும் நடிப்பேன் என்று கூறியுள்ள ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ள படம் பற்றிய பேச்சு தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் இயக்குநர் சிறுத்தை சிவா ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து அவர் ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்குகிறாரா என்ற கேள்வி எழுந்தது. தற்போது வலம் வரும் தகவல்கள் அதை உறுதிபடுத்தும் விதமாக உள்ளது.
ரஜினியின் 168ஆவது படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க, சிவா இயக்குவதாக கூறப்படுகிறது. 90களில் ரஜினிக்கு ஹிட் படங்களாக அமைந்த எஜமான், முத்து, படையப்பா ஆகிய படங்கள் கிராமப்புற பின்னணியில் அமைந்திருந்தன. வீரம், விஸ்வாசம் என கிராமப்புற பின்னணியில் மாஸ் ஹீரோக்களுக்கான கதையமைத்து வரும் சிவா, ரஜினிக்கும் அப்படியொரு திரைக்கதையை எழுதியுள்ளார்.
தர்பார் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்தவுடனே இன்னும் சில மாதங்களில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
மேலும் படிக்க
டிஜிட்டல் திண்ணை: அதிமுகவை பாஜக வளைத்தது எப்படி? சசிகலா வெளியிடும் பகீர்!
திமுக பக்கம் சாய்கிறாரா மைத்ரேயன்?
இதற்காகத்தான் காத்திருந்தேன்: விடைபெற்ற சுஷ்மா
அதிமுகவை திமுகவுக்கு விற்கிறார் சத்யா -போராட்டத்தில் அதிமுகவினர்!