மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

வேலுமணியின் வீடியோ சவால்!

வேலுமணியின் வீடியோ சவால்!

மழைநீர் சேமிப்புத் திட்டத்தைச் சவாலாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவோம் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் வேலுமணி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். பச்சைநிற சட்டையில் கேஷுவலாக தோன்றும் வேலுமணி அதில், “இறைவன் கொடுத்த கொடை மழை. அந்த மழை நீரைச் சேமிப்பது மிக மிக அவசியம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். 200 சதுரடி கொண்ட ஒரு வீட்டில் முறையாக மழை நீரைச் சேகரித்தோம் என்றால் ஒரு குடும்பம் ஒரு வருடத்திற்குத் தேவையான தண்ணீரைச் சேமிக்க முடியும். தமிழ்நாட்டு மக்கள் மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் மழை நீரைச் சேமிக்க வேண்டும். இனி பெய்கின்ற ஒரு துளி மழை நீர் கூட வீணாக கூடாது.

இதை நாம் சவாலாக எடுத்துச் செயல்படுத்துவோம். மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள், மக்கள் மேல் அக்கறை உள்ளவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மக்கள் மத்தியில் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மழை நீரைச் சேமிப்போம் நமக்காக, நாட்டுக்காக, நாளைக்காக என்று பேசியுள்ளார்.

அதிமுகவுக்கு என்று ஒரு ஐடி விங் செயல்பட்டு வரும் நிலையில் அமைச்சர் வேலுமணி தனக்கென பிரத்யேகமாக ஒரு ஆளுமை உயர்த்தும் குழுவை வைத்திருக்கிறார் என்றும் அதன் மூலமாக வேலுமணியை ப்ரமோட் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றும் ஏற்கனவே மின்னம்பலத்தில் விஸ்வரூப வேலுமணி என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் 2016 சட்டமன்றத் தேர்தலில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிக்கு மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற வாசகங்களை வகுத்து, ப்ரமோட் செய்த ஜான் ஆரோக்கியசாமிதான் இப்போது அமைச்சர் வேலுமணிக்காக களமிறங்கியுள்ளார். வேலுமணியை அதிமுகவிலேயே தனித்துவம் மிக்க சக்தியாக முன்னிலைப்படுத்தி மக்களிடையே கொண்டு செல்வதுதான் இந்த டீமின் பணி என்கிறார்கள்.


மேலும் படிக்க


தீரன் மூலம் ராமதாஸ் போடும் திட்டம்!


டிஜிட்டல் திண்ணை: நண்பர் சிலை திறக்க வருவாரா ஃபரூக் அப்துல்லா?


காஷ்மீர் கட்சிகளின் பதவி வெறியும் ஒரு காரணம்!


கோமாளி டிரெய்லர்: ரஜினி ரியாக்ஷன்!


கார்ப்பரேட்டுகள் கைக்குப் போகிறதா காஷ்மீர்? - தமிழகக் குரல்!


புதன், 7 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon