மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 6 டிச 2019

370 நீக்கம் :அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு!

370 நீக்கம் :அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு!

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பைப் பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஆகஸ்ட் 5) மாநிலங்களவையில் அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான ராணுவத்தினர் மற்றும் அதிரடிப் படையினர் காஷ்மீரில் குவிந்துள்ள நிலையில் இன்று அசாம், உபி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 8000 ராணுவ வீரர்கள் காஷ்மீருக்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பைப் பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் டிஜிபிகளுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”அமைதி மற்றும் பொது நல்லிணக்கம்" பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதோடு, நாட்டின் பிற பகுதிகளில் வசிக்கும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக மற்ற மாநிலங்களில் விடுதிகளில் தங்கியிருக்கும் காஷ்மீர் மாநில மாணவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு அமைதியைக் காக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்புப் படைகள் மற்றும் சட்ட ஒழுங்கு அமைப்புக்களைப் பயன்படுத்தி, அனைத்து மாநிலங்களிலும் உஷார் நிலையை அமல்படுத்த வேண்டுமென அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


காஷ்மீர் பிரச்சினை: அரசியல் சாசனப் பிரிவு 370 - 35ஏ என்ன சொல்கிறது?


பழிவாங்கிய ராமானுஜம், ராஜேந்திரன்: ஜாங்கிட்


வீட்டுக் காவலில் தலைவர்கள்: காஷ்மீரில் தொடரும் பதற்றம்!


ரஜினிக்காக வருந்திய கமல்ஹாசன்


காஷ்மீர் - 370: மாநிலங்களவையில் கடும் அமளி!


திங்கள், 5 ஆக 2019

அடுத்ததுchevronRight icon