மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஆக 2019

பழிவாங்கிய ராமானுஜம், ராஜேந்திரன்: ஜாங்கிட்

பழிவாங்கிய ராமானுஜம், ராஜேந்திரன்:  ஜாங்கிட்

தனக்கு உயர் பதவி கிடைக்கவிடாமல் டிஜிபியாக இருந்த ராமானுஜம், டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் பழிவாங்கியதாக கூறியிருக்கிறார் ஓய்வுபெற்ற டிஜிபியான ஜாங்கிட்.

காவல் துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் புகழ்பெற்றவர் டிஜிபியாக இருந்த ஜாங்கிட். தமிழகத்தை கதிகலங்க வைத்த பவேரியா கொள்ளை கும்பலை கண்டறிந்து கட்டுப்படுத்தியது, வெள்ளை ரவி, பங்க் குமார் என்கவுண்டர், தென்மாவட்டங்களில் நடந்த சாதி மோதல்களை கட்டுப்படுத்தியது என ஜாங்கிட் தனது பணிக்காலத்தில் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் இன்றளவும் பேசப்படுகிறது. காவல் துறையில் சிறந்த அதிகாரிகளை பட்டியலிட்டால் அதில் ஜாங்கிட்டுக்கும் நிச்சயம் இடமுண்டு.

ஆனால் தனது பணிக்காலத்தின் இறுதி வருடங்களில் முக்கியத்துவம் இல்லாத பதவிகளை வகித்துவந்தார். மக்களவைத் தேர்தல் வரை சென்னை மாநகர போக்குவரத்துத் துறை ஊழல் கண்காணிப்பு டிஜிபியாக இருந்த ஜாங்கிட், பணி ஓய்வுக்கு இரண்டு மாதங்களே இருந்த நிலையில் கும்பகோணம் போக்குவரத்துக் கழக முதன்மை ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக தூக்கியடிக்கப்பட்டார். இப்பதவி புதிதாக உருவாக்கப்பட்டது. ஆனால் இது சாதாரண காவல் ஆய்வாளர் அல்லது உதவி கண்காணிப்பாளர் நிலையிலான பதவி என்று அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் பல்வேறு மனக்குமுறல்களுடன்தான் ஜாங்கிட் ஓய்வுபெற்றுள்ளார் என்று காவல் துறை வட்டாரங்களில் பேசப்பட்டது. தனது வருத்தங்களை ஒரு சில நண்பர்களிடம் பகிர்ந்துகொண்ட ஜாங்கிட், “கடைசி காலத்தில் என்னை அசிங்கப்படுத்துவதற்காகவே டம்மியான ஒரு பதவியை உருவாக்கி சென்னைக்கு வெளியே கும்பகோணத்திற்கு தூக்கியடித்தனர். எங்கே நான் உயர் பதவிக்கு வந்தால் நல்ல பெயர் வாங்கிவிடுவேனோ என்கிற எண்ணத்தில் டிஜிபியாக இருந்த ராமானுஜம், அண்மையில் ஓய்வுபெற்ற டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் என்னைப் பழிவாங்கினர்” என்று கூறியிருக்கிறார்.

உங்களை ஏன் அவர்கள் பழிவாங்க வேண்டும் என்று நண்பர்கள் கேட்க, “நான் அவர்களுக்கு கெட்டது எதுவும் செய்யவில்லை. பிறகு ஏன் என்னை அவர்கள் பழிவாங்கினார்கள் என்று தெரியவில்லை” என்று சொல்லியிருக்கிறார்.

ஓய்வு பெற்றுவிட்ட ஜாங்கிட் தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு செல்லாமல் சென்னையிலேயே இருக்க முடிவு செய்திருக்கிறார். கல்வித் துறையில் சேவையாற்ற புதிதாக அறக்கட்டளை துவங்கும் அவர், தனக்கு தெரிந்த தொழிற்துறை நிறுவனங்களிடம் அறக்கட்டளைக்காக சிஎஸ்ஆர் நிதியினை பெறவும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். மேலும், புத்தகம் எழுதும் பணிகளிலும் கவனம் செலுத்த இருக்கிறார்.


மேலும் படிக்க


சேரனை மீட்க கிளம்பும் இயக்குநர்கள்: மன்னிப்பு கேட்ட சரவணன்


வெள்ளைக்கொடியுடன் வந்து பிணங்களை எடுத்துச்செல்லுங்கள்: இந்தியா!


குடும்பங்களைக் குறிவைக்கும் சசிகுமார்


டிஜிட்டல் திண்ணை: வேலூர் - அதிமுகவுக்கு நம்பிக்கை தரும் இஸ்லாமியப் பெண்கள்!


சினிமாவுக்கு திரும்பிய உதயநிதி


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

ஞாயிறு 4 ஆக 2019