மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி!

இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி!

நாடு முழுவதும் 23 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு நேற்று (ஜூலை 23) பட்டியல் வெளியிட்டுள்ளது.

உயர் கல்வி பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் போலி பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து அதன் விவரத்தை யுஜிசி வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் செயல்பட்டுவரும் ஸ்ரீபோதி பல்கலைக்கழகம் உட்பட கர்நாடகம், கேரளம், டெல்லி என இந்தியாவில் 2019ஆம் ஆண்டு பட்டியலின்படி 23 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக யுஜிசி தெரிவித்துள்ளது.

டெல்லி

கமர்ஷியல் பல்கலைக்கழக நிறுவனம், யுனைடெட் நேஷன்ஸ் பல்கலைக்கழகம், தொழிற்கல்வி பல்கலைக்கழகம், ஏடிஆர் சென்ட்ரிக் ஜூரிடிக்கல் பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், ஆத்யாத்மிக் விஸ்வத்யாலயா (ஆன்மிகப் பல்கலைக்கழகம்) மற்றும் விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம்.

உத்தரப் பிரதேசம்

வாராணசி சம்ஸ்கிருத விஸ்வ வித்யாலயா, மஹிலா கிராம் விஸ்வ வித்யாலயா, காந்தி ஹிந்தி வித்யாபீடம், தேசிய எல்க்ட்ரோ காம்பிளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக்கழகம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திறந்தநிலை பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேச விஸ்வ வித்யாலயா, மஹராணா பிரதாப் சிக்ஷ நிகேதன் விஷ்வ வித்யாலயா, இந்திரபிரஸ்த சிக்ஷ பல்கலைக்கழகம்

ஒடிஷா

நவபாரத் சிக்ஷ பரிஷத், வடக்கு ஒடிஷா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்.

மேற்கு வங்கம்

இந்திய மாற்று மருந்துக்கான கல்வி நிறுவனம், மாற்று மருந்து மற்றும் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம்.

மகாராஷ்டிரம்

நாக்பூரில் உள்ள ராஜா அரபிக் பல்கலைக்கழகம்,

கர்நாடகம்

பதகன்வி சர்கார் கல்விச் சமூகத்துக்கான சர்வதேச திறந்தநிலை பல்கலைக்கழகம்,

கேரளம்

செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம்

புதுச்சேரி

ஸ்ரீபோதி உயர்கல்வி அகாதெமி

என மேற்குறிப்பிட்ட 23 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன.


மேலும் படிக்க


மின்னம்பலம் செய்தி: தங்கத்துக்கு போன் போட்ட ஸ்டாலின்


டிஜிட்டல் திண்ணை: தமிழிசை-ராஜா மோதல்!


தளபதி உதயநிதி: தலைமை உத்தரவு!


ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


புதன், 24 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon