மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

நீட் மசோதா: மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவு!

நீட் மசோதா: மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவு!

நீட் மசோதா நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை செயலாளர் பதில் அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஜூலை 23) உத்தரவிட்டுள்ளது.

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் 2017ஆம் ஆண்டு, சட்டமன்றத்தில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை சட்டம், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டம் ஆகிய இரு சட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இம்மசோதா நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் மத்திய அரசுத் தரப்பில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இவ்விவகாரம் அரசியல் கட்சியினர் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், கடந்த ஜூலை 16ஆம் தேதி மத்திய உள்துறை துணை செயலாளர் ராஜிவ் எஸ்.வைத்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “2017 பிப்ரவரி 20ஆம் தேதி இம்மசோதா உள்துறை அமைச்சகத்துக்குக் கிடைக்கப்பெற்றது. பின்னர் இம்மசோதா நிறுத்திவைக்கப்பட்டு 2017 செப்டம்பர் 22ஆம் தேதியே தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று (ஜூலை 24) மீண்டும் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, பதில் மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர்தான் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


மேலும் படிக்க


மின்னம்பலம் செய்தி: தங்கத்துக்கு போன் போட்ட ஸ்டாலின்


டிஜிட்டல் திண்ணை: தமிழிசை-ராஜா மோதல்!


தளபதி உதயநிதி: தலைமை உத்தரவு!


ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


புதன், 24 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon