மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

திருமணத்துக்காக அதிகமாக இடம்பெயரும் தமிழர்கள்!

திருமணத்துக்காக அதிகமாக இடம்பெயரும் தமிழர்கள்!

இந்தியாவில் திருமணத்துக்காக வேறு இடங்களுக்கு இடம்பெயரும் ஆண்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் இருமடங்கு உயர்ந்துள்ளது. திருமணத்துக்காக அதிகமாக இடம்பெயரும் இந்தியர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் இடத்தில் இருக்கின்றனர்.

2001, 2011 சென்செஸ் கணக்கீட்டின் அடிப்படையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில் திருமண நோக்கில் இடம்பெயரும் ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள்தான் திருமண நோக்கத்துக்காக அதிகமாக இடம்பெயர்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில், நகர்ப்புற ஆண்கள்தான் திருமணத்துக்காக அதிகமாக இடம்பெயர்கின்றனர். தமிழகத்தில், நகர்ப்புறங்களிலிருந்து இடம்பெயரும் ஆண்களில் 10.2 சதவிகிதத்தினர் திருமண நோக்கத்துக்காக இடம்பெயர்கின்றனர். கிராமப்புறங்களைச் சேர்ந்த 7.9 சதவிகித ஆண்கள் திருமணத்துக்காக இடம்பெயர்பவர்களாக இருக்கின்றனர்.

மேகாலயாவில் உள்ள கிராமப்புறங்களில் 15.3 சதவிகித ஆண்கள் திருமணத்துக்காக இடம்பெயர்பவர்களாக இருக்கின்றனர். நகர்ப்புறங்களில் இவர்களின் அளவு வெறும் 4.9 சதவிகிதம் மட்டுமே. தேசிய அளவில் பார்த்தால், 14.6 கோடி இடம்பெயர்ந்த ஆண்கள் இருக்கும் நிலையில் இதில் 53 லட்சம் பேர் மட்டுமே திருணத்துக்காக இடம்பெயர்ந்த ஆண்களாக இருக்கின்றனர். ஆனால், இந்தியா முழுவதும் உள்ள 30.9 கோடி இடம்பெயர்ந்த பெண்களில் திருமணத்துக்காக இடம்பெயர்ந்த பெண்கள் 20.6 கோடிப் பேர் ஆவர். இந்திய அளவில் மேகாலயாவில் 11.9 சதவிகித ஆண்கள் திருமணத்துக்காக இடம்பெயர்ந்துள்ளனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 9.2 சதவிகித ஆண்களும், மிசோரத்தில் 7.7 சதவிகித ஆண்களும், புதுச்சேரியில் 5 சதவிகித ஆண்களும், கேரளாவில் 4.7 சதவிகித ஆண்களும் திருமணத்துக்காக இடம்பெயர்ந்துள்ளனர்.

2001ஆம் ஆண்டு சென்செஸ் கணக்கீட்டில் மேகாலயா, தமிழகம், மிசோரம், கேரளா, அஸ்ஸாம், மணிப்பூர், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து அதிக அளவிலான ஆண்கள் திருமணத்துக்காக இடம்பெயர்ந்துள்ளனர். 2011ஆம் ஆண்டு சென்செஸ் கணக்கீட்டில் கர்நாடகாவில் திருமணத்துக்காக இடம்பெயர்ந்த ஆண்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.


மேலும் படிக்க


மின்னம்பலம் செய்தி: தங்கத்துக்கு போன் போட்ட ஸ்டாலின்


தளபதி உதயநிதி: தலைமை உத்தரவு!


டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு எதிராக அமித் ஷாவிடம் பன்னீர் புகார்!


ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


செவ்வாய், 23 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon