மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

ஹர்பஜனின் சந்திரயான் சர்ச்சை!

ஹர்பஜனின் சந்திரயான் சர்ச்சை!

சந்திரயான் 2 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு ஹர்பஜன் தெரிவித்த வாழ்த்து செய்தி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவுக்கு சந்திரயான் 2 என்ற விண்கலத்தை நேற்று வெற்றிகரமாக ஏவி சாதனை படைத்துள்ளது. இதற்கு பலதரப்பினரும் இஸ்ரோவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, புஜாரா, முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விரேந்தர் சேவாக் ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இது தொடர்பாக நேற்று ஹர்பஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தான், துருக்கி, துன்ஸியா, லிபியா, அஸர்பைஜான், அல்ஜீரியா, மலேசியா, மாலத்தீவுகள், மௌரிட்டானியா ஆகிய நாடுகளின் தேசியக் கொடிகளைப் பதிவிட்டுள்ளார். அதில் நிலவின் படம் இடம்பெற்றுள்ளது. "சில நாடுகள் தங்கள் கொடிகளில் நிலவைக் கொண்டுள்ளன. ஆனால் சில நாடுகள் நிலவில் தங்கள் கொடியை வைத்துள்ளன" என்று அமெரிக்கா, ரஸ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கொடிகளையும் பதிவேற்றியுள்ளார்.

ஹர்பஜனின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இஸ்லாம் மதத்தைத் குறிக்கும் விதமாக நிலவு படத்தை அந்த நாடுகள் தங்கள் கொடிகளில் வைத்துள்ளபோது அதை விமர்சிப்பது சரியானதல்ல என்று சமூகவலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.


மேலும் படிக்க


மின்னம்பலம் செய்தி: தங்கத்துக்கு போன் போட்ட ஸ்டாலின்


தளபதி உதயநிதி: தலைமை உத்தரவு!


டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு எதிராக அமித் ஷாவிடம் பன்னீர் புகார்!


ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


செவ்வாய், 23 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon