மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

லோக் ஆயுக்தா உறுப்பினர்கள்: தடை நீக்கம்!

லோக் ஆயுக்தா உறுப்பினர்கள்: தடை நீக்கம்!

தமிழகத்தில் அமைக்கப்பட்ட லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்புக்குத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம், மூத்த வழக்கறிஞர் கே.ஆறுமுகம் ஆகியோர் நீதித் துறை சாரா உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுகொண்டனர்.

இவர்களது நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ”தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவர் ராஜாராமும், அரசியலில் தொடர்புடைய ஆறுமுகமும் லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டது சட்டத்திற்கு எதிரானது. இவர்கள் நியமனத்திற்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த மனுவைக் கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த நீதிமன்றம் இவர்களது நியமனத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த தடையை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இவ்வழக்கு இன்று (ஜூலை 23) தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அம்ர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை நியாயமில்லை. ராஜாராமும், ஆறுமுகமும் லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக தேர்வாகும் முன்பே அவர்களது பழைய பதவியை ராஜினாமா செய்துவிட்டனர் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தமிழகத்தில் லோக்ஆயுக்தா உறுப்பினர்களாக ராஜாராம், ஆறுமுகம் பணியாற்றலாம் என கூறி அவர்களின் நியமன தடையை நீக்கி உத்தரவிட்டது.


மேலும் படிக்க


மின்னம்பலம் செய்தி: தங்கத்துக்கு போன் போட்ட ஸ்டாலின்


தளபதி உதயநிதி: தலைமை உத்தரவு!


டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு எதிராக அமித் ஷாவிடம் பன்னீர் புகார்!


ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


செவ்வாய், 23 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon