மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

கர்நாடகத்தைப் போல மேற்கு வங்காளத்தை மாற்ற முயற்சி: மம்தா

கர்நாடகத்தைப் போல மேற்கு வங்காளத்தை மாற்ற முயற்சி: மம்தா

மேற்கு வங்க மாநிலத்தில் கர்நாடகாவைப் போல எம்.எல்.ஏ.க்களை இழுக்க பாஜக முயற்சி செய்வதாகவும், அடுத்த வருடம் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் வாக்குச் சீட்டுகள் கொண்டே நடக்கும் என்று மாநில முதலமைச்சரும் திருணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று (ஜூலை 21) நடைபெற்ற கட்சியின் மாவீரர் தினக் கூட்டத்தில் பேசிய மம்தா, “நாம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை விரும்பவில்லை. வாக்குச் சீட்டுகளை மட்டுமே விரும்புகிறோம். மேற்கு வங்காள மாநிலத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து தேர்தலிலும் இனி வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்படும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைவர்கள் பரப்புரைகளில் சொன்னது மாதிரியே முடிவுகள் வந்துள்ளன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அவர்கள் தங்கள் வசதிக்கேற்ப பயன்படுத்தியதையே இது காட்டுகிறது. அதனால்தான் மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்னும் மர்மம் இருப்பதாகவே தெரிகிறது” என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மத்திய அரசின் அமைப்புகளைப் பயன்படுத்தி திருணமூல் காங்கிரஸ் தலைவர்களையும், சட்டமன்றத் தலைவர்களையும் பாஜகவில் சேருமாறு கட்டாயப்படுத்தி மிரட்டுகின்றனர். சிட்பண்ட் வழக்கில் சிறையில் தள்ளுவோம் என்று சொல்லி மிரட்டுகின்றனர். இன்னும் சில எம்.எல்.ஏ.க்களுக்குச் சில கோடி ரூபாய்களும், பெட்ரோல் பங்க்குகள் தருவதாகவும் சொல்லி வலை விரிக்கின்றனர். கர்நாடகாவைப் போல மேற்கு வங்காளத்தை மாற்ற முயற்சி செய்கிறார்கள். இந்த மிரட்டலுக்கு எதிராக மத்திய பாஜக அரசின் மோசடிகளைத் தோலுரிக்கும் வகையில் ஜூலை 26 முதல் பிரச்சாரத்தைத் தொடங்க இருக்கிறேன்” என்று அறிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.

மம்தாவின் இந்தப் பேச்சுக்குப் பதில் அளித்துள்ளார் மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ். “நாங்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் நடத்தினாலும், வாக்குச் சீட்டு முறையில் நடத்தினாலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயார். ஆனால் மம்தா பெற்ற ஆட்சி, முன்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரம் மூலம் பெற்றது என்பதை அவர் உணர வேண்டும்” என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க

ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி!


அத்தி வரதர்: கலெக்டரை கண்டித்த முதல்வர்


ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்


என்.ஐ.ஏ.சோதனை: கடற்கரையில் ஆளில்லா பங்களாக்களில் என்ன நடக்கிறது?


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


திங்கள், 22 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon