மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

நெட்டிசன்களிடம் சிக்கிய பிரியங்கா

நெட்டிசன்களிடம் சிக்கிய பிரியங்கா

நடிகை பிரியங்கா சோப்ரா ஜூலை 18ஆம் தேதியன்று மியாமியில் சொகுசுக் கப்பலில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருடன் அவரது கணவர் நிக் ஜோனஸ், தாய் மது சோப்ரா ஆகியோரும் இருந்தனர். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களில் சில சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியுள்ளது மட்டுமல்லாமல் கிண்டல்களிலும் கேலிகளிலும் சிக்கியுள்ளன.

அந்தப் படத்தில் பிரியங்கா சோப்ரா சிகரெட் புகைப்பதாகவும், நிக் ஜோனஸும், மது சோப்ராவும் சிகர் புகைப்பதாகவும் தெரிகிறது. இதைத்தொடர்ந்து பிரியங்கா சோப்ராவை நெட்டிசன்கள் கடுமையாகக் கலாய்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி பிரியங்கா சோப்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தீபாவளிக்காக பட்டாசுகளை வெடிக்காமல் இனிப்புகளையும், அன்பையும் பரிமாறிக்கொள்ள வேண்டுமெனவும், பட்டாசுகளின் புகையால் ஆஸ்துமா நோயாளிகள் துன்புறுவதாகவும் தெரிவித்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் தானே ஓர் ஆஸ்துமா நோயாளி எனவும், அதையும் கடந்து வாழ்க்கையில் வெற்றிபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதன்பின் தனது திருமண விழாவுக்காக ஏராளமான பட்டாசுகளை வெடித்து நகரம் முழுவதும் புகை மண்டலமாகும் வகையில் கொண்டாடினார் பிரியங்கா. அப்போதும் அவரது இரட்டை வேடத்துக்காக நெட்டிசன்கள் கலாய்த்தனர். இந்த நிலையில், தான் ஓர் ஆஸ்துமா நோயாளி என கூறிவிட்டு சிகரெட் புகைப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் பிரியங்கா சோப்ரா 2010ஆம் ஆண்டு பதிவிட்ட பழைய ட்வீட் ஒன்றையும் நெட்டிசன்கள் தோண்டி எடுத்து கலாய்த்து வருகின்றனர். அந்த ட்வீட்டில் அவர், “புகைபிடிப்பது மிகவும் மோசமான செயல்” என்று தெரிவித்துள்ளார். அதையும் சேர்த்து பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்தினரோடு புகைபிடிக்கும் படத்தை வைத்துக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.


மேலும் படிக்க

ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி!


அத்தி வரதர்: கலெக்டரை கண்டித்த முதல்வர்


ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்


என்.ஐ.ஏ.சோதனை: கடற்கரையில் ஆளில்லா பங்களாக்களில் என்ன நடக்கிறது?


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


திங்கள், 22 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon