மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

கிச்சன் கீர்த்தனா: கீரை கபாப்

கிச்சன் கீர்த்தனா: கீரை கபாப்

நவீன உலகில் எல்லாவற்றையும் விரைவாக முடிக்க வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட ஒன்றே ஃபாஸ்ட் ஃபுட் உலகம். இயந்திர வாழ்க்கையின் அதிவேகம் காரணமாக துரித உணவுகள் பயன்பாட்டுக்கு வந்தன. சமைப்பது எளிது, வித்தியாசமான சுவை, குறைவான நேரம் என்ற காரணங்களால் துரித உணவுகளுக்கு மக்கள் மாறிவிட்டார்கள்; உணவின் பெயர்களும் மாறி வருகின்றன. இன்றைய மக்களின் மனநிலைக்கேற்பவே பெயரை மாற்றி சத்தான உணவுகளையும் வழங்க வேண்டியுள்ளது. அவற்றில் ஒன்று கபாப்.

என்ன தேவை?

முளைக்கீரை - ஒரு கப்

அமெரிக்கன் கார்ன் - 100 கிராம் (வேக வைக்காதது; டிபார்ட்மென்டல் கடைகளில் கிடைக்கும்)

உருளைக்கிழங்கு - 2

பூண்டு - 5 பல்

இஞ்சி - சிறு துண்டு

பச்சை மிளகாய் - 2

பனீர் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் - ஒன்று

சீரகத் தூள் - 2 சிட்டிகை

சோம்புத் தூள் - 2 சிட்டிகை

பிரெட் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

சோள மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கீரை, பூண்டு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை நன்கு வேகவைக்கவும். அமெரிக்கன் கார்னை தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து அரை டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம், கீரை, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி, இதனுடன் சோம்புத்தூள், சீரகத்தூள், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, அமெரிக்கன் கார்ன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும்.

கலவையை வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி பிரெட் தூள், பனீர் துருவல் சேர்த்துப் பிசைந்து, நீளவாட்டில் உருட்டி, சோள மாவில் உருண்டைகள் அனைத்தையும் புரட்டி எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் உருண்டைகளைச் சேர்த்துப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: இதை பாலக் கீரையிலும் செய்யலாம்.

என்ன பலன்?

நாம் உணவுக்காகப் பயன்படுத்தும் கீரைகளில் குளோரோஃபில் என்ற பச்சையம் அதிக அளவில் இருக்கிறது. அத்துடன் ஸ்டீராய்டு, அல்கலாய்டு, கரோட்டினாய்டு, சிட்ரிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம் ஆகியவையும் அடங்கி உள்ளன. கொழுப்பு, கார்போ-ஹைட்ரேட் ஆகியவை மிகக் குறைந்த அளவிலேயே இருக்கின்றன. உடல் ஆரோக்கியத்துக்கும் வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ள கீரையைத் தினமும் ஏதாவது ஒருவிதத்தில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

நேற்றைய ரெசிப்பி: முடக்கத்தான் கீரை தோசை


மேலும் படிக்க

ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி!


அத்தி வரதர்: கலெக்டரை கண்டித்த முதல்வர்


ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்


என்.ஐ.ஏ.சோதனை: கடற்கரையில் ஆளில்லா பங்களாக்களில் என்ன நடக்கிறது?


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


திங்கள், 22 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது