மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜூலை 2019

அத்தி வரதர்: கலெக்டரை கண்டித்த முதல்வர்

அத்தி வரதர்: கலெக்டரை கண்டித்த முதல்வர்

காஞ்சிபுரம் அத்தி வரதர் சுவாமி தரிசனத்தை ஒட்டி, ‘முதியவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் காஞ்சிக்கு வராதீர்கள்’ என்று காஞ்சி மாவட்ட கலெக்டரே பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு நகரம் ஸ்தம்பித்துக் கிடக்கிறது.

தினந்தோறும் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் வந்துகொண்டிருக்கும் நிலையில் இன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் காஞ்சியை அடையும் பக்தர்களின் எண்ணிக்கை விறுவிறுவென்று கூடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்று மதியம் ஒரு மணியளவில் காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையாவுக்கு தலைமைச் செயலகத்திலிருந்து போன் போயிருக்கிறது. பிற்பகல் 3.30க்கு கோட்டையில் முதல்வர் அத்தி வரதர் விழா பற்றி அவசர ஆலோசனை நடத்துகிறார். உடனே வரவேண்டும் என்பதுதான் தகவல்.

உடனடியாக தனது பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு மதியமே சென்னை புறப்பட்டுவிட்டார் கலெக்டர் பொன்னையா. நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் டிஜிபி திரிபாதி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், கலெக்டர் பொன்னையா உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் கலெக்டர் மீது கடுமையான கோபத்தைக் காட்டிவிட்டார் முதல்வர் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

“தமிழ்நாட்ல ஒரு ஆன்மிக விழா நடக்குது. 45 நாள் நம்மால பாதுகாப்பு தர முடியாதா...மக்களை காஞ்சிபுரத்துக்கு வரவேணாம்னு பேப்பர்ல விளம்பரம் கொடுத்திருக்கீங்க. அதைவிட நமக்கு என்ன வேலைனு கேக்குறாங்க” என்று கலெக்டரிடம் பாய்ந்திருக்கிறார் முதல்வர்.

அப்போது கலெக்டர், “சார்... ஆரம்ப நாட்கள்ல போதுமான பாதுகாப்பு கொடுத்திட்டு வந்தோம். ஆனால் வர வர கூட்டம் கட்டுக்கடங்காம வருது. 40 வருஷத்துக்கு அப்புறம் இருப்போமோ இல்லையோ இப்பவே பாத்துட்டு வந்துவிடுவோம்னு மிடில் ஏஜ் காரங்க நிறைய பேர் வர்றாங்க. வெளி மாநிலத்துலேர்ந்து வர்றாங்க. இன்னும் ஃபோர்ஸ் வேணும் சார். ஒரு வேளை பெரிய அளவுல அசம்பாவிதம் நடந்துடுமோனுதான் மக்களுக்கு எச்சரிக்கைக்காக அந்த விளம்பரம் கொடுத்தோம்’ என்று கலெக்டர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

”இனிமேலும் உயிரிழப்பு ஏற்படாம பாத்துக்கணும். என்னென்ன பாதுகாப்பு வேணுமோ எல்லாம் கொடுக்கச் சொல்றேன்” என்ற முதல்வர், டிஜிபியிடம் இதுபற்றி சில முக்கிய அறிவுரைகளைக் கொடுத்திருக்கிறார். காஞ்சியின் நெரிசல், பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து ஆகியவை பற்றி நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

காஞ்சி கலெக்டர் பொன்னையா, துணை முதல்வருக்கு நெருக்கமானவர் என்றபோதும் துணை முதல்வரின் முன்னிலையிலேயே அவரை கடுமையாக காய்ச்சி எடுத்துவிட்டார் முதல்வர்.

முதல்வர் ஆலோசனையை அடுத்து காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் பங்குபெறும் முக்கியக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இக்கூட்டத்தில் மதுரை, கோவை, சமயபுரம், வேலூர் உள்ளிட்ட அற நிலையத்துறை இணை ஆணையர்களும் மற்ற உயரதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.

அத்தி வரதர் விழாவை வரும் நாட்களில் அமைதியாக நடத்துவது எப்படி என்பது பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: துரைமுருகனுக்கு திமுக தந்த அதிர்ச்சி - வேலூர் திருப்பம்!


டோல் கேட்: தமிழக எம்.பி.க்களை ‘கூல்’ செய்த கட்கரி


ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

ஞாயிறு 21 ஜூலை 2019