மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

சென்னை: சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் தொழிற்கூடம்!

சென்னை: சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் தொழிற்கூடம்!

குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களைத் தயாரிக்கும் தொழிற்கூடம் சென்னையில் நேற்று (ஜூலை 20) தொடங்கப்பட்டது.

2015-2016 தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, “நகர்ப்புற பகுதிகளில் உள்ள 78 சதவிகித பெண்கள் மாதவிடாய் காலத்தில், சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்தி சுகாதாரமான பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். கிராமப்புறத்தைப் பொறுத்தவரை 48 சதவிகித பெண்கள் மட்டுமே தூய்மையான சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர்” என்பது தெரியவந்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவிகள் இன்றளவும், மாதவிடாய் காலங்களில் துணி பயன்படுத்துவது தொடர்ந்து வருகிறது.

இதற்குச் சந்தைகளில் கிடைக்கும் பிரபலமான பெயர் கொண்ட சானிட்டரி நாப்கின்களை அதிக விலை கொடுத்து வாங்க முடியாததுதான் காரணம். மக்களவையில் நேற்று முன்தினம் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மாதவிடாய் கால சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஆறு சானிட்டரி நாப்கின்கள் கொண்ட பாக்கெட், ரூ.6 என்ற விலையில் வழங்கப்படுகிறது. சமூக சுகாதாரப் பணியாளர்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று இந்த நாப்கின்கள் விநியோகம் செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று (ஜூலை 20) குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களைத் தயாரிக்கும் தொழிற்கூடம் சென்னையில் தொடங்கப்பட்டிருக்கிறது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில், இந்தத் திட்டத்தை மயிலாப்பூர் எம்.எல்.ஏ நட்ராஜ் தொடங்கி வைத்தார். அப்போது பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கண்ணம்மா என்ற திட்டத்தின் கீழ் சென்னை ரோட்டரி கிளப் ஆதரவுடன் தொடங்கப்பட்ட இந்தத் தொழிற்கூடம் மூலம் ஆண்டுக்கு 6 லட்சம் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கப்படவுள்ளது. பத்து நாப்கின்கள் ரூ.25க்கு விற்கப்படவுள்ளது. இதை மாற்றுத்திறனாளி மாணவர்கள் தயாரிக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய எம்.எல்.ஏ நட்ராஜ் , “இத்திட்டத்தை சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

“இங்குத் தயாரிக்கப்படும் நாப்கின்களில் 8,000 நாப்கின்கள் மாதந்தோறும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும். மீதமுள்ளவை மலிவு விலையில் விற்கப்படும். இதன்மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் பயன்பெறுவர்” என்று வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: துரைமுருகனுக்கு திமுக தந்த அதிர்ச்சி - வேலூர் திருப்பம்!


டோல் கேட்: தமிழக எம்.பி.க்களை ‘கூல்’ செய்த கட்கரி


ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


ஞாயிறு, 21 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon