மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

சூர்யாவுக்கு வடக்கிலிருந்து வரும் எதிர்ப்பு!

சூர்யாவுக்கு வடக்கிலிருந்து வரும் எதிர்ப்பு!

தமிழ் சினிமாவில் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வில்லன் நடிகர்கள் பாலிவுட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது போல் சூர்யா நடிக்கும் அடுத்தப் படத்துக்கும் பாலிவுட்டிலிருந்தே வில்லன் நடிகர் வந்துள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழு இறுதிகட்டப் பணிகளை பரபரப்பாகச் செய்துவருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் சுதா கொங்காரா இயக்கும் சூரரைப் போற்று படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் பட்டியல் தமிழிலிருந்து பாலிவுட், ஹாலிவுட் என நீள்கிறது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இணை தயாரிப்பாளராக குனித் மொங்கா இணைந்துள்ளார். இவர் சர்வதேச அளவில் விருதுகள் வென்ற பல படங்களின் இணைத் தயாரிப்பாளர் ஆவார். ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு சண்டைக்காட்சிகளை வடிவமைக்கும் கிரேக்பவல் படக்குழுவில் இணைந்துள்ளார்.

அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில், இந்தி நடிகர் பரேஷ் ராவல் வில்லன் நடிகராக இணைந்துள்ளார். 80களில் இந்தித் திரையுலகில் அறிமுகமான பரேஷ் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: துரைமுருகனுக்கு திமுக தந்த அதிர்ச்சி - வேலூர் திருப்பம்!


டோல் கேட்: தமிழக எம்.பி.க்களை ‘கூல்’ செய்த கட்கரி


ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


ஞாயிறு, 21 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon