மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா

கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தில் முதன்முறையாக பிரதான கதாபாத்திரத்தில் நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்தப் படத்தின் வெற்றி, ஐஸ்வர்யாவுக்குத் திருப்புமுனையாக அமைந்தது. கனா வெற்றியால் பிரதான கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் கவனம் செலுத்த தொடங்கினார். கனா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி படத்திலும் ஐஸ்வர்யாவே நடித்திருக்கிறார். விரைவில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், மேயாத மான் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். வேதாளம் சொல்லும் கதை படத்தை இயக்கிய ரதீந்திரன் ஆர்.பிரசாத் இந்தப் படத்தை இயக்குகிறார். இன்னும் வெளியாகாத வேதாளம் சொல்லும் கதை படத்திலும் ஐஸ்வர்யாவே நாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ஸ்டோன் பென்ச் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மற்றொரு படத்தையும் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவிருப்பதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி இணையும் புதிய படத்தை இயக்கவுள்ளார். சசிகாந்த் தனது ஒய் நாட் ஸ்டூடியோஸ் மூலம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்கவுள்ளது.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: துரைமுருகனுக்கு திமுக தந்த அதிர்ச்சி - வேலூர் திருப்பம்!


டோல் கேட்: தமிழக எம்.பி.க்களை ‘கூல்’ செய்த கட்கரி


ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


ஞாயிறு, 21 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon