மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

பிராமணர்களுக்கு நலவாரியம்: சட்டமன்றத்தில் கோரிக்கை!

பிராமணர்களுக்கு நலவாரியம்: சட்டமன்றத்தில் கோரிக்கை!

காவல்துறையின் மானியக் கோரிக்கையில் பேசிய முன்னாள் போலீஸ் அதிகாரியும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வுமான நட்ராஜ், பிராமணர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று பேரவையில் கோரிக்கை வைத்திருக்கிறார்.

நேற்று (ஜூலை 19)காவல்துறை மானியக் கோரிக்கையில் நட்ராஜ் எம்.எல்.ஏ. பேசுகையில், “காஞ்சி மாநகரில் அத்திப்பூத்தாற் போல் அத்தி வரதர் எழுந்தருளி இருக்கிறார். நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 1979 ம் வருடம் அத்தி வரதர் எழுந்தருளிய போது புரட்சி தலைவர் அவர்களின் ஆட்சி தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது. 2019 இந்த வருடம் அத்தி வரதர் நீரிலிருந்து நிலத்தில் வந்து அருள் பாலிக்கிறார். அத்தி வரதர் ஆசியோடு மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் அண்ணா திமுக ஆட்சி தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபடும் என்பதில் ஐயமில்லை” என்று அத்திவரதருக்கும் ஆட்சிக்கும் முடிச்சு போட்டு பேச்சைத் தொடர்ந்தார்.

“ வருடத்திற்கு சராசரியாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டங்களுக்கு ஜனநாயக உரிமைகளை காக்கும் விதமாக அனுமதி அளிக்கப்படுகிறது. இது நாட்டில் நடக்கும் போராட்டங்களில் 15 % ஆகும். அவற்றை சமாளிப்பது எளிதல்ல. எந்த அளவு போராட்டங்களை சமாளிக்க எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சர்ச்சைக்குரியது. காவல்துறையால் 0.5% க்கும் குறைவான நிகழ்வுகளில் மட்டுமே சக்தி பிரயோகிக்கப்பட்டது என்பது பாராட்டுக்குரியது.

எனது தொகுதி சாலை மேம்பாடு குடிநீர் வடிகால் பணிகள் விரைவாக செயல் படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ள உள்ளாட்சி துறை அமைச்சருக்கு நன்றி கூறி , மேலும் மயிலாப்பூரில் பல்லக்குமானியம்,திருவள்ளுவர் நகரில் உள்ள மூன்று மதுபான கடைகளை மூட வேண்டிய கோரிக்கை, தாழ்வான பகுதிகளில் மழை நீர் சேகரிக்க கிணறுகள் வெட்ட கோரிக்கை, வெங்கடேச அக்ரஹாரத்தில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான பழைய கட்டிடத்தை இடித்து புதிய வணிக வளாகம் வாகன நிறுத்தத்தோடு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, ஹாமில்டன் பாலம் அருகில் உள்ள குப்பை கிடங்கை அகற்றி அங்கு குடிசை மாற்று வாரியம் மூலமாக அருகில் குடியிருக்கும் ஏழை மக்களுக்கு தரமான வீடுகள் கட்டி தர வேண்டும் ஆகியவற்றைப் பரிசீலிக்க வேண்டும்.

மேலும் என் தொகுதி வாழ் பிராமணர்கள் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் அமைத்தது போல் அவர்களுக்கும் நலவாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறார்கள். அர்ச்சகர்கள் ,கிராம பூசாரிகளுக்கு அமைக்கப்பட்ட நலவாரியம் சிறப்பாக செயல் படவும் கோரிக்கை வைக்கிறார்கள். இதனை அரசின் கனிவான கவனத்திற்கும் பரிசீலனைக்கும் வைக்கிறேன்” என்று பேசினார் நட்ராஜ்.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!

பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!

அடிக்கப் பாய்ந்த சத்யா - அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!

அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!

அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


சனி, 20 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon