மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

இலவச சிலிண்டர் திட்டத்துக்குப் பாராட்டு!

இலவச சிலிண்டர் திட்டத்துக்குப் பாராட்டு!

நரேந்திர மோடியின் இலவச சமையல் சிலிண்டர் திட்டத்தைச் சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) பாராட்டியுள்ளது.

இந்தியாவின் ஏழைக் குடும்பங்களுக்குச் சுகாதாரமான எரிவாயுவை வழங்கும் நோக்கத்தில் மத்திய மோடி அரசால் 2016ஆம் ஆண்டின் மே மாதம் 1ஆம் தேதி பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுநாள் வரையில் நாடு முழுவதும் மொத்தம் 7.4 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 86 சதவிகித பயனாளர்கள் தங்களது சமையல் சிலிண்டர்களை மீண்டும் நிரப்புவதாகவும், இத்திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தைச் சர்வதேச எரிசக்தி நிறுவனம் பாராட்டியுள்ளது. இதுகுறித்து சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் செயலாக்க இயக்குநரான ஃபத்தி பிரோல், டெல்லியில் ஜூலை 19ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசுகையில், “நாடு முழுவதும் 2020ஆம் ஆண்டுக்குள் சமையல் சிலிண்டர் இணைப்புகளைப் பரவலாக வழங்குவது என்பது மிகப் பெரிய சாதனையாகும். இது எரிசக்தி சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல; இது பொருளாதாரம் மற்றும் சமூகம் சார்ந்த விஷயமாகும். கிராமப்புறங்களில் மரக்கட்டைகள் மற்றும் வேளாண் கழிவுகளைக் கொண்டு சமைப்பதால் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படுகின்றன. இந்த சமையல் சிலிண்டர் திட்டத்தால் சுகாதாரமான சூழல் நிலவுகிறது” என்று பாராட்டிப் பேசினார்.

உலக சுகாதார அமைப்பும் இந்தியாவின் உஜ்வாலா யோஜனா திட்டத்தைப் பாராட்டியிருந்தது. உலகம் முழுவதும் காற்று மாசுபாடு பெரும் பிரச்சினையாக இருக்கும் நிலையில் இந்தியா போன்ற நாடுகளில் சுகாதாரமான சமையல் எரிவாயு திட்டங்கள் போன்ற நடவடிக்கைகளால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!

பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!

அடிக்கப் பாய்ந்த சத்யா - அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!

அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!

அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


சனி, 20 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon