மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

ஏழு பேர் விடுதலை: ஆளுநருக்கு உத்தரவிட முடியாது!

ஏழு பேர் விடுதலை: ஆளுநருக்கு உத்தரவிட முடியாது!

ஏழு பேர் விடுதலை தொடர்பான பரிந்துரை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் மாநில ஆளுநரே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நளினி,பேரறிவாளன், முருகன் உள்ளிட்டோரை விடுவிக்கத் தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரை மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காததால், தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்று அதில் ஆளுநர் கையெழுத்திட உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நளினி வழக்குத் தொடர்ந்தார்.

இம்மனு கடந்த 12ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தினால் மனுதாரர் உள்ளிட்ட ஏழு பேரும் சட்டவிரோத காவலில் இருப்பதாகவே கருதப்படும் என்று நளினி தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பில், இவ்விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் வழக்கை ஜூலை 18க்கு ஒத்திவைத்தனர். இம்மனு மீண்டும் இன்று (ஜூலை 18) விசாரணைக்கு வந்தபோது, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் ஒரு மாநில ஆளுநர் இப்படி நடந்துகொள்ள வேண்டும். இப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். நளினி தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க

அடிக்கப் பாய்ந்த சத்யா - அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!

30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!

மணிரத்னம் - நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!

டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா

தயாராகிறது பாகுபலி 3?


வியாழன், 18 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon