மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 8 டிச 2019

செந்நாய்களை விரட்டும் ‘கழுகு’!

செந்நாய்களை விரட்டும் ‘கழுகு’!

கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்த கழுகு 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

2012 ஆம் ஆண்டு இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் வெளியான படம் கழுகு. இந்தப் படத்தில் தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவனின் பாடல்கள், மலைக் கிராமத்தின் காட்சிகள், புதுமையான கதைக்களம் என ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது கழுகு. கொடைக்கானல் பகுதியில் தற்கொலை செய்பவர்களின் உடலை மீட்டெடுக்கும் பணி செய்பவர்களின் அறியப்படாத கதையை எதார்த்தமாக பதிவு செய்தது இப்படம்.

இந்த நிலையில், கழுகு படத்தின் இரண்டாவது பாகம் கழுகு 2 என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.இந்த படத்தையும் சத்யசிவாவே இயக்கியுள்ளார். இதில், கிருஷ்ணா, காளி வெங்கட், பிந்துமாதவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முதல் பாகத்திற்கு இசையின் மூலம் பங்களித்த யுவன் ஷங்கர் ராஜா, இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. செந்நாய்களின் தொல்லையால் அவதியுறும் தேயிலை தொழிலாளர்களின் பாதுகாவலுக்கு வரும் கிருஷ்ணா, காளி வெங்கட் ஆகியோரின் காட்சிகளுடன் தொடங்கும் இப்பட டீசர், அதனையொட்டி நிகழும் மோதல், பரபரப்பு என எதிர்பார்ப்பை தூண்டுகிறது கழுகு 2. முதல் பாகத்தில் மரணமடைந்த பிந்து மாதவியோடு தற்கொலை செய்து கொள்ளும் கிருஷ்ணா, இப்பாகத்தில் எப்படி உயிரோடு வந்தார் என்ற கேள்விக்கு படத்தில் பதிலிருக்கும் எனத் தெரிகிறது.

இப்படத்தை மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ளார். விரைவில் இப்படத்தின் இசை மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கழுகு 2 டீசர்

மேலும் படிக்க

அடிக்கப் பாய்ந்த சத்யா - அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!

30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!

மணிரத்னம் - நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!

டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா

தயாராகிறது பாகுபலி 3?


வியாழன், 18 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon