மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

கேரள நடிகையை அறிமுகப்படுத்தும் தனுஷ்

கேரள நடிகையை அறிமுகப்படுத்தும் தனுஷ்

தனுஷ் நடிக்கும் புதிய படம் மூலம் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் ஒரு படம் நடிக்கவுள்ளார் என்ற செய்தி கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாகத் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களால் அமையாமல்போன இந்தக் கூட்டணி தற்போது இணைவதற்கான நேரம் நெருங்கியுள்ளது.

வெளிநாடுகளை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் படமாக உருவாகும் என ஏற்கெனவே கூறப்பட்ட இந்தப் படத்தில் தற்போது ஐஸ்வர்யா லக்ஷ்மி இணைந்துள்ளார். மலையாளத்தில் இவர் கதாநாயகியாக வலம் வருகிறார். சசிகாந்த் தனது ஒய் நாட் ஸ்டூடியோஸ் மூலம் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்கவுள்ளது. பேட்ட படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திருநாவுக்கரசு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றவுள்ளார்.

இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

தனுஷ் நடிப்பில் தற்போது ஒரே நேரத்தில் இரு படங்கள் தயாராகி வருகின்றன. துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதில் ஸ்நேகா, மெஹ்ரின் பிர்ஸாடா என இரு நாயகிகள் அவருக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.

வெற்றி மாறன் இயக்கத்தில் நான்காவது முறையாக நடிக்கும் அசுரன் படத்தின் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இது தவிர மாரி செல்வராஜ், ராம் குமார் ஆகியோர் இயக்கவுள்ள படங்களில் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார்.

மேலும் படிக்க

30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!

தயாராகிறது பாகுபலி 3?

மணிரத்னம் - நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!

டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா

வைகோ எம்.பி.யாக சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு!


வியாழன், 18 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon