மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

ஆழியாற்றின் குறுக்கே தடுப்பணைகள்: முதல்வர்

ஆழியாற்றின் குறுக்கே தடுப்பணைகள்: முதல்வர்

கேரள அரசின் ஒப்புதலைப் பெற்ற பிறகு ஆழியாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஜூலை 30ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் ஜூலை 20ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. விரைவில் கூட்டத்தொடர் முடிவடையவுள்ள நிலையில் தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் நேற்று (ஜூலை 17) சட்டமன்றத்தில் நேரமில்லா நேரத்தில் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆழியாறு முதல் மணக்கடவு வரை தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி, வால்பாறை சட்டமன்றத் தொகுதி மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிகளில் பரம்பி குளம் ஆழியாறு திட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கூடுதலாகப் பெய்யும் மழைநீர் கடலில் கலப்பதைத் தடுக்கும் விதமாகக் கூடுதல் தடுப்பணைகள் கட்டுதல் குறித்த கருத்துகளுக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், ஆழியாற்றில் மணக்கடவு வரை மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்குவது தொடர்பாக கேரள மாநில அரசோடு பேசி ஒப்புதல் பெறப்பட்டபின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

முன்னதாக மழைநீரின் உபரிநீர் கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மூன்று தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!

தயாராகிறது பாகுபலி 3?

மணிரத்னம் - நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!

டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா

வைகோ எம்.பி.யாக சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு!


வியாழன், 18 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon