மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

இந்தியாவில் அதிகரிக்கும் வரி மோசடிகள்!

இந்தியாவில் அதிகரிக்கும் வரி மோசடிகள்!

சென்ற நிதியாண்டில் ரூ.37,946 கோடி மதிப்பிலான வரி மோசடிகளை வரித் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வரி மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஜூலை 16ஆம் தேதி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், 2018-19 நிதியாண்டில் மொத்தம் ரூ.37,946 கோடி மதிப்பிலான வரி மோசடிகள் நடந்துள்ளதை வரித் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் ரூ.6,520 கோடி மதிப்பிலான வரி மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

வரிக் கடனுக்காகப் போலியான ரசீதுகளைத் தயாரித்து மோசடி செய்யும் நபர்களையும் வரித் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். 2018-19 நிதியாண்டில் இவ்வாறாக ரூ.11,251 கோடி மோசடி நடந்துள்ளது. இந்த ஆண்டின் ஏப்ரல் - ஜூனில் ரூ.2,805 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு 2017ஆம் ஆண்டில் ரூ.12.67 கோடி மதிப்பிலான ஐந்து மோசடிகள் மட்டுமே நடைபெற்றிருந்தன. இந்த மோசடிகளில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். 2018-19 நிதியாண்டில் போலியான ரசீதுகளைத் தயாரித்து மோசடி செய்த 1,620 வழக்குகளில் 154 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டின் ஏப்ரல் - ஜூன் மாதங்களில் இவ்வாறாக 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அனுராக் தாகூர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!

30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!

“மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்

தயாராகிறது பாகுபலி 3?

அதிமுக தலைவராகிறாரா ரஜினி?


புதன், 17 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon