மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 23 ஜன 2020

துப்பாக்கிச் சுடுதல்: அசத்தும் இந்திய இளம் வீரர்கள்!

துப்பாக்கிச் சுடுதல்: அசத்தும் இந்திய இளம் வீரர்கள்!

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடர் ஜெர்மனியில் ஜூலை 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. 20ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தத் தொடரில் இந்திய அணி வீரர்கள் அசத்தி வருகின்றனர்.

மகளிர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வளரிவன் 251.6 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். மற்றொரு வீராங்கனை மெஹுலி கோஷ் 250.2 புள்ளிகளுடன் வெள்ளி வென்றார்.

இதே பிரிவு அணிகள் போட்டியில் இந்தியாவின் இளவேனில்-மெஹுலி-ஷிரேயா அகர்வால் ஆகியோர் அடங்கிய அணி தங்கம் வென்றது.

ஆடவர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் வென்றனர்.

50மீட்டர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் பிரியா ராகவ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

இத் தொடரில் இந்திய அணி இதுவரை 7 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலத்துடன் 16 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது. 6 தங்கம் உள்பட 14 பதக்கங்களுடன் சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!

மணிரத்னம் - நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!

தயாராகிறது பாகுபலி 3?

30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!

“மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்


புதன், 17 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon